வெள்ளை வெங்காயத்தின் நன்மைகள் – white onion benefits in tamil

0
601

வெள்ளை வெங்காயத்தின் நன்மைகள் – white onion benefits in tamil

white onion benefits in tamil வெள்ளை வெங்காயத்தின் நன்மைகள் இந்தியா சமையல் கலாச்சாரத்தில் வெங்காயம் என்பது தவிர்க்க முடியாத ஒரு பொருள் ஆகும். உணவின் சுவையே அதிகரிக்க வெங்காயம் முக்கிய பங்கு ஆற்றுகிறது. வெள்ளை வெங்காயம் நடுத்தரம்  முதல் பெரிய அளவு மற்றும் வட்டமான அல்லது சற்று குறுகலான முனைகளுடன் கோள வடிவத்தில் இருக்கும்.

வெள்ளை வெங்காயம் மிருதுவாகவும் மென்மையாகவும், கசப்பான, லேசான இனிப்புச் சுவையுடன் இருக்கும் மற்றும் கனிவான, சிராய்ப்பு இல்லாத சுவை கொண்டது. வெங்காயம் நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. வெள்ளை வெங்காயம் இஸ்ரேல் நாட்டில் தான் அதிகமாக விளைகிறது.

வெள்ளை வெங்காயம் கிடைக்கும் பருவம்

வெள்ளை வெங்காயமானது கோடை காலம் குளிர்காலம்  என இல்லாமல் ஆண்டு முழுவதும் கிடைக்கும் பொருளாக வெங்காயம் உள்ளது.

வெள்ளை வெங்காயத்தில் உள்ள சத்துக்கள்

வெள்ளை வெங்காயத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்துக்கள், பொட்டாசியம், கால்சியம்,  மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்தது இந்த வெள்ளை வெங்காயம்.

வெள்ளை வெங்காயம் வரலாறு

வெள்ளை வெங்காயம் ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டது மற்றும் பண்டைய காலங்களிலிருந்து பயிரிடப்பட்டு வருகிறது.

வெள்ளை வெங்காயம் எப்போது சாகுபடி செய்யப்பட்டு உலகின் மற்ற பகுதிகளுக்குப் பரவியது என்பதற்கான சரியான தேதி தெரியவில்லை.

இன்று வெள்ளை வெங்காயம் பரவலாக உள்ளது மற்றும் அவை உழவர் சந்தைகள், மளிகைக் கடைகள் , சாலையோர கடைகளில் கூட எளிதாக கிடைக்கிறது. எளிய மக்கள் வாங்கும் விதமாக மிக மலிவான விலையில் கிடைக்கிறது white onion benefits in tamil.

வெள்ளை வெங்காயத்தின் நன்மைகள் – white onion benefits in tamil

 • கோடை காலங்களில் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயத்தை அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள வெப்பம் குறைகிறது மற்றும் வியர்வையை கட்டுப்படுத்துகிறது.
 • வயிறு மற்றும் குடலில் உள்ள பாக்டிரியாக்களை அளிக்கும் தன்மை கொண்டது வெள்ளை வெங்காயம்.
 • வெள்ளை வெங்காயம் தினம் தோறும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே அதிகப்படுத்துகிறது.
 • வெள்ளை வெங்காயத்தில் சோடியம் இருப்பதால் வைரஸ் அனைத்தையும் அளித்து வெளியேற்றுகிறது.
 • அலர்ஜி மற்றும் தோல் சம்பந்தமான அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்துகிறது.
 • இதய நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயம் சேர்ப்பதால் இதயம் சம்பந்தமான நோய்கள் குணமாகிறது மற்றும் ஆரோக்கியமான இதய செயல் பாட்டிற்கு வெள்ளை வெங்காயம் பெரிதும் உதவுகிறது.
 • உயர்ரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் இரத்த உறைவுகளில் இருந்து பாதுகாக்கிறது.
 • வெள்ளை வெங்காயத்தில் உள்ள குரோமியம் மற்றும் சல்பர் போன்ற உள்ளடக்ககள் இரத்த சர்க்கரையை சீராக்க மற்றும் இரத்த சர்க்கரையை குறைக்கவும் வெள்ளை வெங்காயம் உதவுகிறது.
 • நீரிழிவு நோய் உள்ளவர்கள் அன்றாட உணவில் வெள்ளை வெங்காயத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் என ஆய்வுகள் சொல்கின்றன.
 • வெள்ளை வெங்காயத்துடன் சம அளவு வெள்ளரிக்காய் சேர்த்து சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் பருமன் மற்றும் ஊளை சதை குறையும்.
 • வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால்  உடலுக்கு தேவையான சக்திகள் கொடுக்கிறது மற்றும் நரம்பு தளர்ச்சியை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
 • புற்று நோயை எதிர்க்கும் சக்தி வெள்ளை வெங்காயத்திற்கு உள்ளது.
 • வயது முதிர்வு காரணத்தால் ஏற்படும் எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்களுக்கு வெள்ளை வெங்காயம் பெரிதும் உதவுகிறது.
 • வெள்ளை வெங்காயம் மனஅழுத்தத்தை குறைத்து நல்லதொரு தூக்கத்தை வரவைக்கிறது.
 • வெள்ளை வெங்காயத்தை அரைத்து சாறாக்கி தலை முடியில் தேய்த்து வந்தால் முடி உதிர்வதை தடுக்கிறது மற்றும் முடியில் உள்ள பொடுகு போன்றவற்றை அளிக்கும் சக்தி வெள்ளை வெங்காயத்திற்கு உள்ளது.
 • செரிமான கோளாறுகள் உள்ளவர்கள் வெள்ளை வெங்காயத்தை தினமும் எடுத்து வந்தால் செரிமான கோளாறுகள் படி படியாக குறையும்.
 • காய்ச்சல் உள்ளவர்கள் மற்றும் தலை வலி உள்ளவர்கள் வெள்ளை வெங்காயத்தை அரைத்து சாறாக்கி தலையில் தேய்த்தால் 8 மணி நேரத்தில் காய்ச்சல் மற்றும் தலைவலி காணாமல் போய்விடும்.

வெள்ளை வெங்காயத்தின் தீமைகள்

 வெள்ளை வெங்காயத்தின் நன்மைகள் white onion benefits in tamil வெள்ளை வெங்காயத்தின் தீமைகள் வெள்ளை வெங்காயம் வரலாறு

 • காய், கனி, தானியங்கள் போன்ற எந்த பொருளை எடுத்து கொண்டாலும் நன்மைகள் அதிகமாக இருந்தாலும் சில தீமைகள் இருக்கும் அதுபோல தன வெள்ளை வெங்காயத்தில் சில தீமைகள் உள்ளது.
 • வெள்ளை வெங்காயம் தினமும் சாப்பிட்டு வந்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து சில ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள் என்ன என்ன பிரச்சனைகள் வரும் என்பதை கீழே காணலாம்.
 • மென்மையான சருமம் கொண்டவர்கள் வெள்ளை வெங்காயத்தை தொடர்ந்து எடுத்து வந்தால் முகத்தில் அல்லது தொழில் அரிப்பு மற்றும் ஒவ்வாமை ஏற்படும்.
 • தேசிய சுகாதார நிபுணர்களின் அறிக்கை படி வாயு உண்டாக்குகிறது என சொல்கிறார்கள்.
 • நெஞ்சு எரிச்சல் உள்ளவர்கள் வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் அதிகமாக கூடும் எனவே இவர்கள் வெங்காயத்தை அளவாக சாப்பிட வேண்டும்.
 • வெங்காயம் அதிகமாக எடுத்து கொண்டால் அடிவயிற்று வீக்கம் ஏற்படும் white onion benefits in tamil
READ HERE  பலாக்காய் நன்மைகள் – Jack fruit benefits in tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here