vegetables benefits in tamil – காய்கறி நன்மைகள்
vegetables benefits in tamil காய்கறி நன்மைகள் காய்கறிகள் நமது உணவில் குறிப்பிடத்தக்க முக்கிய அங்கம் வகிக்கிறது. உடலுக்குத் தேவையான முக்கிய மூலப் பொருட்களின் தேவையைப் பூர்த்தி செய்கிறது, பழங்களைத் தவிர்த்து வேறு எந்த ஆகாரப் பொருட்களுக்கும் இந்த இயக்கம் கிடையாது.
காய்கறிகள் தாதுப்பொருட்கள் உயிர்சத்துக்கள் ஆகியவற்றிற்கான மூலாதாரங்ங்கள் நிறையப் பெற்றுள்ளன. சக்தி அளிக்கும் மாவுப் பொருட்கள் புரதம் நிறைய உள்ளன .
மனித உடல் வளர்ச்சிக்கும் , உடல்நலத்திற்கும் குறைந்தது 10 தாது பொருட்கள் வேண்டும். பொதுவாக நமது சாதாரண உணவில் சுதையம் , பாஸ்பரஸ் அயம், மிகக் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
காய்கறிகளில் இவைகள் நிரம்ப உள்ளன உயிர்ச்சத்து ஏ பி சி டி நிறைய காய்கறிகளில் இருக்கிறது.நல்ல உடல் நலத்திற்கு நம் உடலின் சுண்ணாம்புக்கார இருப்பை வைத்திருப்பது மிக அவசியம். இறைச்சி, பால் பொருட்கள்,முட்டை இந்த இருப்பைக் குறைத்து விடும்.ஆனால் காய்கறி இதை அதிகரிக்கும்,
காய்கறிகள் அறிய மதிப்பு மிக்க சிட்ரிக், மாலிக், அஸிடிக் , டானிக் , டிர்டானிக் ஆகிய அமிலங்களை உற்பத்தி செய்கிறது ,இவை பழங்களிலும் உள்ளன.இந்த இயற்கை அமிலங்கள் வயிற்றின் பசியையும் செரிமானத் சக்தியையும் அதிகரிக்க கல்லீரலின் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.
வாழ்நாளை கூட்டும் காய்கறிகள்
காய்கறி உணவை மட்டும் உண்பவர்களது வாழ்நாள் நீங்குவதற்கு மிகுந்த வாய்ப்புகள் உள்ளன என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து தெரிய வந்தது .புலால் உண்கின்ற குழந்தைகளை விடச் சற்று காலந் தாழ்த்தியே காய்கறி உணவு உண்டு வாழ்கின்ற குழந்தைகள் வளர்ச்சிக்கு வருகிறார்கள். வயது வந்தபின் இவர்களிடையே இதயக் கோளாறுகளும் எலும்பு தொடர்புடைய கோளாறுகளை ஏற்படுவது மிகக் குறைவே, 4 மாதங்களிலிருந்து 10 வயது வரை உள்ள சைவ உணவு உண்கிற 400 குழந்தைகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் இருந்து இது அறியப்பட்டது,
பசுமையான காய்கறி சாப்பிடுபவர்களை ஸ்கர்வி நோய் அணுகாது .
மூன்று ஆண்டுகளில் 60 ஆயிரம் மைல்களுக்கு மேல் கடற் பயணம் செய்த ஆங்கிலேயர் கேப்டன் ஜேம்ஸ் குக் தனது பட்டறிவின் தன்னுடைய மாலுமிகளில் பசுமையான காய்கறிகளைச் சாப்பிடுபவர்க ஸ்கர்வி நோய் அணுகவில்லை, காய்கறிகள் சாப்பிடாதவர்கள் அந்நோயினால் பாதிக்கப் பட்டார்கள் என்பதை கண்டுபிடித்தார். இந்தக் கண்டுபிடிப்புக்காக விஞ்ஞானக் கழகம் , விஞ்ஞானப் படிப்பறிவு இல்லாத கேப்டன் ஜேம்ஸ் குக்கைக் கௌரவித்தது.
காய்கறிகளில் பல தாதுப்பொருட்களும் பல உயிர்ச் சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆகையால் அடிக்கடி காய்கறிகளைக் கழுவக் கூடாது. புதிய காய்கறிகளில் அதிக சத்துக்கள் இருக்கின்றன. குளிர்சாதனைப்பெட்டி வைத்து இருப்பவர்கள் கூட மூன்று அல்லது ஐந்து தினங்களுக்கு மேல் போகாமல் வைத்துவிடவேண்டும்.
உருளை கிழங்கு வள்ளிக்கிழங்கு இவற்றின் தோலின் நிறைய சத்துகள் இருக்கின்றன. இவற்றை தோலுடன் சமைப்பது நலம், முள்ளங்கி , கேரட் மேல் தோலில் உயிர்சத்து சி மிகுதியாக இருக்கிறது. ஆகையால் அதை வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
செம்பு பாத்திரத்தில் காய்கறிகளை வேக வைத்தால் உயிர்சத்து சி போய்விடும். கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் காய்கறிகளை போட்டு வேகவையுங்கள் அதிக அளவில் நீரில் அல்லாமல் போதிய அளவு நீரில் வேக வைக்கலாம். [பிரஷர் குக்கரில் ]அழுத்தம் கொடுத்த நீராவி சமையலில் வேக வைக்கலாம்.ஒரு முறை வேகவைத்ததைத் திரும்பச் சுட வைப்பது நல்லதன்று. காய்கறிகளின் சத்து வேகவைக்கும் பொழுது நீரில் இறங்கிவிடும் .அதை சூப்பாகப் பயன்படுத்தலாம்.
நமது நாட்டின் ஒவ்வொரு வருடமும் 43 மில்லியன் டன் காய்கறி உற்பத்தி ஆகிறது அதை 30 முதல் 35 சதவீதம் வரை போதுமான பக்குவப்படுத்தி பாதுகாப்பதற்கான வசதிகள், விற்பனை வசதிகள் இல்லாமல் வீணடிக்கப்படுகிறது. உற்பத்தியானவை வீணடிக்கப்படாமல் தடுக்கப்பட்டால் உற்பத்தியாளர்களுக்கும் உபயோகிப்பவர்களுக்கும் நன்மை அளிக்கும். இப்பொழுது நபர் ஒன்றுக்கு 150 கிராம் காய்கறிகள் தான் கிடைக்கின்றன,
சுவைகள் ஆறு, அவை இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு , காரம் எனப்படும் .இக்காலத்தில் கசப்பு சுவையும் துவர்ப்பு சுவையும் உணவில் குறைந்திருக்கிறது, கசப்பு சுவை குறைய நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது, துவர்ப்பு சுவை குறைவால் பெண்களுக்கு பெரும்பாடு ஏற்படுகிறது,
காய் வகைகளின் மருத்துவப் பயன்கள்
தாவர உணவு பொருட்களிலேயே மரத்திலிருந்து பெறப்படும் பெற்றவாறே உண்ணும் வகைகளை கனிகள் என்ழைக்கப்படுகின்றோம். ஆனால் காய்கள் என்பனவற்றை திருத்தி பக்குவம் செய்து பயன்படுத்த வேண்டும். இவற்றின் பச்சையாக உண்ணும் வகையில் காய்களின் தக்காளி வெள்ளரி ஆகிய சிலவும் உண்டு vegetables benefits in tamil காய்கறி நன்மைகள்.
இந்த காய்களில் சிலவகை பிஞ்சாக பயன்படும் .சிலவகை நன்கு முற்றிய பின் மட்டுமே பயன்படுத்த முடியும். காய்கனி உணவு மனித உடல் நலத்திற்கும் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. நம் உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை காய்களின் ஏராளமாக உள்ளன,
காய்கறிகளும் மருந்துகளும்
நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை நோய் எதிர்ப்பு ஆற்றலையும் நோய் வந்தால் நலமாகவும் நமது உணவில் அதிக அளவில் பச்சைக் காய்கறிகள் இடம் பெற்றாக வேண்டும் .
வெறும் தானிய வகைகள் மட்டுமே உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அளிப்பதில்லை .வெறும் தானிய வகைகளை மட்டும் உண்ணும் வழக்கம் உடையவர்கள் பல்வேறு வகையான பிணிகளுக்கு இலகாவார்கள்.அவர்களின் உடல் அதிகமாக பருமன் அடைந்து பலவிதமான பிணிகளுக்கு அஸ்திவாரம் அமைத்துக் கொள்கிறார்கள்.
காய்களின் தான் எல்லா வித சத்துக்களும் முழுமையாக அமைந்துள்ளன. சத்தில்லாத காய்கறிகள் கிடையாது.
காய்கறிகளை அதிகமாக உண்ண வேண்டும், வெறும் சாதத்தை மட்டும் அதிகமாக உண்பது உடல் நலத்திற்கு ஏற்றதல்ல.
புதிய காய்கறிகளாக அன்றாடம் வாங்கி சமைப்பதே மேலானது. காய்கறிகளை நறுக்கி நெடுநேரம் காற்றாட விடுவது நல்லதல்ல சமைக்கும்போது உடனுக்குடன் காய்களை நறுக்கிக் கொள்வதே நலம். காலையிலே சாப்பிட அலுவலகம் ஓடும் இப்பொழுதுள்ள அவசர வாழ்க்கையில் இது எங்கே முடிகிறது ,அடுத்த வீட்டு அம்மாள் முதல் நாள் இரவே காய்கறிகளை நறுக்கி வைப்பதே நான் பார்த்து இருக்கின்றேன். அதன் பிறகு அதில் சத்து எங்கே இருக்கும் .அது வெறும் வயிற்றை அடைப்பதற்கு தான் உதவும், வீட்டு தாய்மார்கள் இதில் சற்று கவனம் செலுத்த வேண்டும்.
காய்களை வேக வைத்த பின் அடியில் தங்கியிருக்கும் நீரை கீழே ஊற்றி விடுகின்றனர் .அதனால் அதில் தங்கியுள்ள உப்பு சத்துக்களும் உலோக சத்துக்களும் வீணாக போகின்றன, ஆதலால் அந்த நீரையும் சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதில் என்ன செய்வது என்று கேட்கலாம் அளவோடு நீரை சேர்த்து வேக வையுங்கள் ஒவ்வொரு காய்களும் வெவ்வேறு வகையான உப்புக்களும் உயிர்சத்துக்களும் உள்ளன ,அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகை நோய்களை போக்க பயன்படும் உணவாக உண்ணுகிற தானிய உணவுகளில் உள்ள சத்துக்கள் அதிகமாக காய்களின் தான் உள்ளன என்பது நினைவில் இருக்கட்டும் vegetables benefits in tamil காய்கறி நன்மைகள்.
vegetables benefits in tamil – காய்கறி நன்மைகள்
- உருளைக்கிழங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
- வெண்டைக்காய் எடை குறைப்பிற்கு உதவுகிறது,
- பீர்க்கங்காய் கண் பார்வை குறைபாட்டை சரி செய்கிறது,
- புடலங்காய் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது,
- தக்காளி கேன்சர் செல்கள் உருவாவதை தடுக்கிறது.
- சின்ன வெங்காயம் நோய் தொற்று வராமல் தடுக்கிறது.
- பெரிய வெங்காயம் இரைப்பைப் புண்ணை குணப்படுத்தும்.
- பீன்ஸ் மன அழுத்தத்தை குறைத்து உறக்கத்தை கொடுக்கும்
- முட்டைகோஸ் நோய் எதிர்ப்பு சக்திக்கும் செரிமானத்திற்கும் உதவுகிறது.
- பீட்ரூட் இரத்த கொதிப்பை கட்டுப்படுத்துகிறது .
- காலிஃப்ளவர் ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
- வாழைக்காய் வாழைத்தண்டு சர்க்கரை நோய் சிறுநீரக கல் பாதிப்பிலிருந்து பாதுகாக்கிறது செரிமானத்திற்கு உதவுகிறது.
- கொத்தவரங்காய் சர்க்கரை நோயை குணப்படுத்த உதவுகிறது.
- பாகற்காய் நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது.
- புதினா ரத்தத்தை சுத்திகரிக்கிறது.
- கொத்தமல்லி தோல் நோயை குணப்படுத்தும்.
- கருணைக்கிழங்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது ,
- சேப்பங்கிழங்கு உடல் வெப்பத்தை தணிக்க பயன்படுகிறது .கொழுப்பை குறைக்கிறது ,
- மரவள்ளிக்கிழங்கு இதயத்துடிப்பை சீராக வைக்கிறது,
- சக்கரவள்ளி கிழங்கு சருமப் பாதுகாப்பிற்கு பயன்படுத்தபடுகிறது.
- தேங்காய் ஞாபக சக்தி அதிகரிக்கிறது.
- முத்துசோளம் உடல் வலிமையை அதிகரிக்கிறது.
- காளான் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது.
- கருவேப்பிலை கண் கல்லீரல் நோய்களை தடுக்கிறது.
- பச்சைமிளகாய் சரும பிரச்சனைகளை தடுக்கிறது.
- கேரட் கேன்சரை தடுக்கவும் , கண் தநோயைத் தடுக்கவும் பயன்படுத்தபடுகிறது ,
- மாங்காய் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
- நூல்கோல் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.