TNPSC பொது தமிழ் – தமிழ் இலக்கியம் (பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்)

0
2021

தமிழ் இலக்கியம் (பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்)

 • சங்க நூல்கள் எனப்படுபவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்.
 • பத்துப்பாட்டில் பத்து நூல்களும், எட்டுத்தொகையில் எட்டு நூல்களும் உள்ளன.
 • இவற்றை ‘மேல்கணக்கு நூல்கள்’ என்று கூறும் வழக்கமும் உண்டு.
 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பெரும்பாலானவை அறநூல்களே.

1. நாலடியார்

 • நாலடியார் ஆசிரியர் – சமணமுனிவர்
 • நாலடியார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
 • இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது.
 • அறக்கருத்துக்களைக் கூறுவதாகும்.
 • ‘நாலடி நானூறு’ என்னும் சிறப்புப் பெயரும் இதற்குண்டு.
 • இந்நூல் சமணமுனிவர் பலர் பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
 • “நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணிய ராயினும்
  ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
  சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
  வாய்க்கால் அனையார் தொடர்பு” – சமணமுனிவர்

2. நான்மணிக்கடிகை

 • நான்மணிக்கடிகை – ஆசிரியர் – விளம்பிநாகனார்
 • விளம்பி என்பது ஊர் பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர்.
 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.
 • கடிகை என்றால் அணிகலன் (நகை) ஆகும்.
 • நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள்.
 • ஒவ்வொரு பாட்டும் நான்கு மணி மணியாக அறக் கருத்துக்களை கொண்டது.
 • “மனைக்கு விளக்கம் மடவாள்;மடவாள்
  துனக்குத் தகைசால் புதல்வர்; மனக்கினிய
  காதல் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்
  ஓதின் புகழ்சால் உணர்வு”. – விளம்பிநாகானார்

3. இனியவை நாற்பது – பூதஞ்சேத்தனார்

ஆசிரியர் குறிப்பு

 • பெயர் – மதுரை தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேத்தனார்
 • ஊர் – மதுரை
 • காலம் – கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
 • நூல் குறிப்பு – இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. நன்மைதரும் இனிய கருத்துகளை நாற்பதுப் பாடல்களில் தொகுத்துரைப்பதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.

4. இனியவை நாற்பது

 • “குழவி பிணியின்றி வாழ்தல் இனிதே
  கழறும் அவையஞ்சான் கல்வி இனிதே
  மயரிக ளல்லராய் மாண்புடையார்ச் சேரும்
  திருவுந்தீர் வின்றேல் இனிது.”
 •  “சலவைச் சாரா விடுதல் இனிதே
  புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே
  மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம்
  தகுதியால் வாழ்தல் இனிது” – பூதஞ்சேந்தனார்

5. பழமொழி, நானூறு

 • கல்வியின் சிறப்பு – ஆசிரியர் – முன்றுறை அரையனார்.
 • ஆசிரியர் குறிப்பு
 • முன்றுறை என்பது ஊர்பெயர் அரையான் என்பது அரசனைக் குறிக்கும் சொல்.
 • முன்றுறை என்ற ஊரை ஆண்ட அரசனாக இருக்கலாம் அல்லது அரையன் உன்பது புலவரின் குடிப்பெயராகவும் இருக்கலாம்.

நூல் குறிப்பு:

 • பதினெண்கீழக்கணக்கு நூல்களுள் ஒன்று பழமொழி நானூறு
 • நானூற்று பாடல்களைக் கொண்ட நூல் இது.
 • ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி இடம் பெற்றுள்ளது.
 • ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ என்பதற்கு ‘கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டாம்’ என்று பொருள்.
 • பழமொழி நானூறு
 • “ஆற்றவும் கற்றார் அறிவுடையார்; அஃதுடையார்
  நாற்றிசையும் செல்லாத நாடில்லை; அந்நாடு
  வேற்றுநாடு ஆகர் தமவேயாம் ஆயினால்
  ஆற்றுணா வேண்டுவது இல்”.- முன்றுறை அரையனார்

6. ஏலாதி 

ஆசிரியர் குறிப்பு

 • ஏலாதியை இயற்றியவர் கணமேதாவியார்.
 • இவருக்குக் கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு.
 • இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
 • இவர் ஏலாதியில் சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலிய உயரிய அறக்கருத்துகளை வலியுறுத்திக் கூறுகிறார்.
 • இவர் கடைச்சங்க காலத்தில் வாழ்ந்தவர்.
 • “வணங்கி வழியொழுகி மாண்டார்சொல் கொண்டு
  நுணங்கிநூல் நோக்கி நுழையா – இணங்கிய
  பால்நோக்கி வாழ்வான் பழியில்லா மன்னனாய்
  நூல்நோக்கி வாழ்வான் நுனித்து”. – கணிமேதாவியார்

நூற்குறிப்பு:

 •  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று ஏலாதி.
 • இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எணபத்தொரு வெண்பாக்களை கொண்டுள்ளது.
 • நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை இந்நூல் நவில்கிறது.
 • இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது.
 • ஏலம் என்னும் மருந்துப் பொருளை முதன்மையாகக் கொண்டு இலவங்கம் சிறுநாவற்பூ, மிளகு, திப்பிலி, சுக்கு ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர்.
 • இம்மருந்து உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும்.
 • அதுபோல இந்நூலின் கருத்துக்கள் கற்போரின் அறியாமையை அகற்றும்.
 • இந்நூலின் ஐம்பத்தொன்பதாவது பாடல் நமக்குப் பாடமாக அமைந்துள்ளது.

7. சிறுபஞ்சமூலம்

 ஆசிரியர் குறிப்பு:

 • பெயர் – காரியாசான்
 • மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணவர் என சிறப்புப்பாயிரம் கூறுகிறது.
 • இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்
 • இவரும் கணிமேதாவியாரும் ஒரு சாலை மாணக்கராவர்.
 • பெரும்பான்மை பொது அறக்கருத்துகளும் சிறுபான்மை சமண அறக்குருத்துகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

 நூல் குறிப்பு:

 •  சிறுபஞ்சமூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
 • கடவுள் வாழ்த்துடன் தொண்ணூற்றெழு வெண்பாக்கள் உள்ளன.
 • கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய ஐந்து மூலிகையும் உடல் நோயைத் தீர்ப்பன. இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள ஐந்து கருத்துகளும் மக்கள் மனநோயைப் போக்குவன.
 • ஆகையால் இந்நூல் சிறுபஞ்சமூலம் எனப் பெயர் பெற்றது.
 • கண்வனப்புக் கண்ணோட்டம் கால்வனப்புச் செல்லாமை
  எண்வனப்பு இத்துணையாம் என்றுரைத்தல்- பண்வனப்புக்
  கேட்டார்நன்; றென்றல் கிளர்வேந்தன் தன்னாடு
  வாட்டான்நன் றென்றல் வனப்பு”. – காரியாசன்

8. முதுமொழிக்காஞ்சி

 • ஆசிரியர் – மதுரைக் கூடலூர் கிழார்.
 • பிறந்த ஊர் – கூடலூர்
 • சிறப்பு – இவர்தம் பாடல்களை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்கள் மேற்கோளாகக் கையாண்டுள்ளார்கள்.
 • காலம் – சங்க காலத்திற்குப் பின் வாழ்ந்தவர்.

நூல் குறிப்பு:

 • முதுமொழிக்காஞ்சி என்பது காஞ்சி திணையின் துறைகளுள் ஒன்று.
 • பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இந்நூல் உலகியல் உண்மைகளைத் தெளிவாக எடுத்து இயம்புகிறது.
 • அறவுரைக்கோவை எனவும் வழங்கப்படுகிறது.
 • பத்து அதிகாரங்கள் உள்ளன. ஒவ்வோர் அதிகாரத்திலும் பத்துச் செய்யுள் உள்ளன.
 • இந்நூல் நூறு பாடல்களால் ஆனது.

சிறந்த பத்து:

(சிறந்ததெனக் கூறப்படும் பத்துப் பொருளைத் தன்னகத்தே கொண்டிருப்பது சிறந்த பத்து)

 1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
  ஓதலில் சிறந்தன்(று) ஒழுக்கம் உடைமை
 2. காதலில் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்
 3. மேதையில் சிறந்தன்று கற்றது மறவாமை
 4. வண்மையில் சிறந்தன்று வாய்மை யுடைமை
 5. இளமையில் சிறந்தன்று மெய்பிணி இன்மை
 6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று
 7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று
 8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
 9. செற்றாரைச் செறுத்தலில் தற்செய்கை சிறந்தன்று
 10. முன்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று.  – மதுரைக் கூடலூர்கிழார்
READ HERE  TNPSC பொதுத்தமிழ் – பெயர்ச்சொல்லின் வகையறிதல் Tamil Ilakkanam Peyar Sollin Vagaigal

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here