TNPSC இலக்கணம் தொடரும் தொடர்பும் அறிதல் (i) இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் (ii)அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்

0
445

கொடுக்கப்பட்டுள்ள தொடருக்கு தொடர்புடைய சான்றோரையோ அல்லது நூலையோ தேர்வு செய்தலே தொடரும் தொடர்பும் அறிதல் ஆகும்.

இதனை அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர் – அடைமொழியால் அறியப்படும் நூல்கள் என்றும் அழைக்கலாம்.

தொடர் :
இங்கு தொடர் என்று சுட்டிக்காட்டுவது ஒரு சான்றோரை அல்லது ஒரு நூலை புகழ்ந்தோ, வியந்தோ சொல்லும்படியான சொற்களைக் கொண்ட தொடர் ஆகும்.

தொடர்பு:
கொடுக்கப்பட்டிருக்கும் சொற்றொடருக்கு எந்த நூல் அல்லது எந்த சான்றோர் தொடர்பானவர் என்பதைக் குறிப்பதாகும்.

அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர்:

தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்

பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர், இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ், பூங்காட்டுத் தும்பி – பாரதிதாசன்

காவடி சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் – அண்ணாமலை

காந்தீயக் கவிஞர் – நாமக்கல் கவிஞர்

சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் – வேங்கட ராஜூலு ரெட்டியார்

உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் – மு.வரதராசனார்

சிலம்பு செல்வர் – ம.பொ.சிவஞானம்

சொல்லின் செல்வர் – ரா.பி.சேதுப்பிள்ளை

சொல்லின் செல்வன் – அனுமன்

தமிழ் தென்றல் – திரு.வி.க.

வள்ளலார் – ராமலிங்க அடிகளார்

கிருத்துவக் கம்பன் – எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை

தனது கல்லறையில் தன்னை ஓர் தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் – ஜி.யூ.போப்.

ஆசு கவி – காளமேகப் புலவர்.

எழுத்துக்கு – இளம்பூரணார்.

சொல்லுக்கு – சேனாவரையார்.

உரையாசிரியர் – இளம்பூரணார்.

உச்சிமேல் புலவர் கொள் – நச்சினார்க்கினியர்

தமிழ் வியாசர் – நம்பியார் நம்பி.

புதினப் பேரரசு – கோ.வி.மணிசேகரன்

ஏழிசை மன்னர் – தியாகராய பாகவதர்

மொழி ஞாயிறு – தேவநேயப் பாவாணர்

கவிக்கோ – அப்துல் ரஹ்மான்

தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை – கல்கி

தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி – அகத்தியர்

தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி, உத்தம சோழ பல்லவராயன், இராமதேவர் (கல்வெட்டுகள்), அருண்மொழித் தேவர் – சேக்கிழார்

இலக்கண தாத்தா – மே.வி.வேணுகோபால்

முத்தமிழ்க்காவலர் – கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை

சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான் – புதுமைப்பித்தன்

தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் – ஜெயகாந்தன்

தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி – அண்ணாதுரை

தமிழ்நாட்டு பெர்னாட்ஷா – மு.வரதராசனார்

புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில் புதுக்கவிதை தோற்றுவித்தவர் – ந.பிச்சமூர்த்தி

தமிழ் தாத்தா – உ.வே.சா

தமிழ் நாடகத் தந்தை – சம்பந்த முதலியார்

தமிழ் நாடக தலைமையாசிரியர்

நாடக உலகின் இமயம் – சங்கரதாஸ சுவாமிகள்

உவமைக் கவிஞர் – சுரதா

தெற்காசிய சாக்ரடீஸ் – பெரியார்

தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் இலக்கிய தோற்றுனர் – வீரமாமுனிவர்

குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர், தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன், பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு – வாணிதாசன்.

கவி யோகி – சுத்தானந்த பாரதி.

தற்கால உரைநடையின் தந்தை – ஆறுமுக நாவலர்.

தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை – மறைமலைஅடிகள்

வில்லுப் பாட்டுக்காரர் – கொத்தமங்கலம் சுப்பு.

ஆசிய ஜோதி – நேரு

ஆசிய ஜோதி நூலை எழுதியவர் – கவிமணி

மூல நூலை எழுதியவர் – எட்வின் அர்னால்ட்

திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் – மாணிக்கவாசகர்

தமிழ்நாட்டின் அட்லி சேஸ் – சுஜாதா

தென்னாட்டு தாகூர் – வெங்கட ரமணீ

பண்டித மணி – கதிரேசன் செட்டியார்

சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பட்டவர், பேயார் – காரைக்கால் அம்மையார்

வெண்பா பாடுவதில் வல்லவர் – புகழேந்தி

பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி – பெரியாழ்வார்

தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. – அகிலன்

தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் – தாயுமானவர்

கவிராட்சசன் – ஓட்டக்கூத்தர்

திவ்ய கவி, அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி – பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்)

நாட்டுப்புறவியலின் தந்தை – ஜேக்கப் கரீம்.

தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை – வானமா மாலை.

மண் தோய்ந்த புகழினான் – கோவலன்

வீடு வீடாக பிச்சையெடுத்த தமிழ் தொண்டு செய்தவர் – ஆறுமுக நாவலர்

பொய்யா குலக்கொடி நதி – வைகை

கணக்காயர் என்பவர் – சோமசுந்தர பாரதியார்

நீதி நாயகர் – வேதநாயகம் பிள்ளை

கம்பரை ஆதரித்த வள்ளல் – சடையப்ப வள்ளல்

முச்சங்கம் வளர்கூடல் நகர் – மதுரை

தமிழ் நந்தி – மூன்றாம் நந்தி வர்மன்

தண்டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன் – சீத்தலைச் சாத்தனார்

நற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் – நக்கீரர்

தமிழ் கவிஞருள் அரசர் – திருத்தக்கதேவர்

தமிழ் வேதம் செய்த மாறன், குருகைக் காவலன், பராங்குசன், சடகோபன் – நம்மாழ்வார்

சூடிக்கொடுத்த சுடர்கொடி, வைணவம் தந்த செல்வி – ஆண்டாள்

குழந்தை கவிஞர் – அழ.வள்ளியப்பா

மக்கள் கவிஞர் – பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்

சைவ சமயத்தின் செல்வி – மங்கையற்கரசியார்

திராவிட ஒப்பிலக்கண தந்தை – கார்டுவெல்

நவீன கம்பர் – மீனாட்சி சுந்தரம் பிள்ளை

நாவலர் – சோமசுந்தர பாரதி

இந்திய சினிமா தந்தை – தாதாசாகிப் பால்கே

ஆட்சி மொழிக் காவலர் – ராமலிங்கனார்

ஆஸ்தானக் கவிஞர் – நா.காமராசன்

கவியரசு – வைரமுத்து,கண்ணதாசன்

திருக்குறளார் – வி.முனுசாமி

கவிப்பேரரசு – வைரமுத்து

தசாவதாணி – செய்கு.தம்பியார்

பண்மொழிப் புலவர் – அப்பாதுரை (எ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை

நரை முடித்த சொல்லால் முறை செய்த அரசன் – கரிகாலன்

திருமுறைகளை தொகுக்குமாறு வேண்டிய அரசன் – முதலாம் ராஜராஜன்

சைவ உலக செஞ்ஞாயிறு, ஆளுடை அரசு, தர்ம சேனர், மருள் நீக்கியார், அப்பர்- திருநாவுக்கரசர்

தோடுடை செவியன், காளி வள்ளல். ஆளுடைப் பிள்ளை, தோணி புறத் தோன்றல், திராவிட சிசு, நாளும் இன்னிசையால் தமிழ் பரப்புவர் – திருஞான சம்பந்தர்

ஆளுடை நம்பி, திருநாவலூரார், நம்பி ஆரூரார் வன்தொண்டர், தம்பிரான் தோழர் – சுந்தரர்.

நல்லிசைப் புலவர் தமிழ் மூதாட்டி – ஔவையார்

மும்மொழிப் புலவர் – மறைமலை அடிகள்

விஷ்ணுசித்தர் – பெரியாழ்வார்.

தேசியம் காத்த செம்மல்(திரு.வி.க), பிரணவ கேசரி,வேதாந்த பாஸ்கர் – முத்துராமலிங்க தேவர்

திருக்குற்றால நாதர் கோவில் வித்வான் – திரிகூடராசப்ப கவிராயர்

இரட்டைப் புலவர்கள் – இளஞ்சூரியர், முதுசூரியர்

அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்:

மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் – சீவக சிந்தாமணி

தமிழ் மறை, முப்பால், உத்திரவேதம், தெய்வ நூல், உலகப்பொது மறை, வாயுரை வாழ்த்து, வள்ளுவ பயன், பொய்யா மொழி, ஈறடி வெண்பா, இயற்கை வாழ்வில்லம், காலம் கடந்த பொதுமை நூல், தமிழ் மாதின் இனிய உயிர் நிலை. – திருக்குறள்

செந்தமிழ்க்காப்பியம், முத்தமிழ்க்காப்பியம், குடிமக்கள் காப்பியம், முதற்காப்பியம், நாடக காப்பியம், மூவேந்தர் காப்பியம், தேசிய காப்பியம், சமுதாயக்காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், புரட்சிக்காப்பியம், உரைநடையிட்ட பாட்டுடைச்செய்யுள், சிலம்பு, சிறப்பு அதிகாரம் – சிலப்பதிகாரம்

இரட்டைக் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்/மணிமேகலை

நெடுந்தொகை – அகநானூறு

கற்றறிந்தார் ஏற்கும் நூல் – கலித்தொகை

பௌத்த காப்பியங்கள் – மணிமேகலை /குண்டலகேசி.

மணிமேகலை துறவு, துறவு நூல், பௌத்த காப்பியம்,அறக்காப்பியம், சீர்திருத்தக் காப்பியம் – மணிமேகலை

புறம், புறப்பாட்டு,தமிழ் வரலாற்றுக் களஞ்சியம் – புறநானூறு

வஞ்சி நெடும் பாட்டு – பட்டினப்பாலை

பாணாறு – பெரும்பாணாற்றுப்படை

பெருங்குறிஞ்சி, காப்பியப்பாட்டு,உளவியல் பாட்டு – குறிஞ்சிப்பாட்டு

புலவராற்றுப் படை, முருகு,கடவுளாற்றுப் படை – திருமுருகாற்றுப்படை

வேளாண்வேதம், நாலடி நானூறு,குட்டித் திருக்குறள் – நாலடியார்

சின்னூல் என்பது – நேமிநாதம்

வெற்றி வேட்கை, திராவிட வேதம், தமிழ் மறை வேதம், திருவாய் மொழி – நறுந்தொகை

திருத்தொண்டர் புராணம், வழிநூல்,திருத்தொண்டர் மாக்கதை, அறுபத்து மூவர் புராணம் –பெரிய புராணம்

ராமகாதை, ராம அவதாரம், கம்பராமாயணம், சித்திரம் – இராமாயணம்

முதுமொழி, மூதுரை, உலக வசனம்,பழமொழி நானூறு – பழமொழி

கம்பர் தன் நூலுக்கு இட்ட பெயர் – ராமாவதாரம்.

தமிழ் மொழியின் உபநிடதங்கள் – தாயுமானவர் பாடல்கள்

குறத்திப்பாட்டு, குறம், குறவஞ்சி நாடகம் – குற்றாலக் குறவஞ்சி

குழந்தை இலக்கியம் – பிள்ளைத் தமிழ்

உழத்திப்பாட்டு – பள்ளு

இசைப்பாட்டு –பரிபாடல் / கலித்தொகை

அகவல் காப்பியம், கொங்குவேள் மாக்கதை – பெருங்கதை

தமிழர் வேதம் – திருமந்திரம்

தமிழ்வேதம், சைவ வேதம், தெய்வத்தன்மை கொண்ட அழகிய வாய்மொழி – திருவாசகம்

தமிழ் வேதம் – நாலாயிர திவ்ய பிரபந்தம்

குட்டி தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்

குட்டி திருவாசகம் – திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி.

பத்து பருவங்களைக் குறிக்கும் நூல் – பிள்ளைத் தமிழ்.

திருக்குறளின் பெருமையைக் குறிக்கும் நூல் – திருவள்ளுவ மாலை.

புலன் எனும் சிற்றிலக்கிய வகை – பள்ளு

தூதின் இலக்கணம் – இலக்கண விளக்கம்.

தமிழின் முதற்கலம்பகம் – நந்தி கலம்பகம்

தமிழர்களின் கருவூலம் – புறநானூறு

96 வகை சிற்றிலக்கிய நூல் – சதுரகாதி.

கிருஸ்துவர்களின் களஞ்சியம் – தேம்பாவணி

தமிழரின் இரு கண்கள் – தொல்காப்பியம் /திருக்குறள்

வடமொழியின் ஆதி காவியம் – இராமாயணம்

64 புராணங்களைக் கூறும் நூல் – திருவிளையாடற் புராணம்

இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு

இயற்கை இன்பக்கலம் – கலித்தொகை

இயற்கை பரிணாமம் – கம்பராமாயணம்

இயற்கை இன்ப வாழ்வு நிலையம் – சிலப்பதிகாரம் /மணிமேகலை

நட்புக்கு கரும்பை உவமையாக கூறும் நூல் – நாலடியார்.

பாவைப்பாட்டு – திருப்பாவை

பதினெட்டு உறுப்புகளை பாடப்பெற்ற நூல் – கலம்பகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here