அன்னாச்சி பழம் – மருத்துவ குணங்கள்

0
408

அன்னாசி பழம் நன்மைகள்

அன்னாசி பழம் நன்மைகள் pineapple benefits in tamil அன்னாசி பழத்தின் குறிப்பு நமது நாட்டில் கேரள, ஆந்திர கடற்கரையோரம், அஸ்ஸாம் ஆகிய பகுதியில் அண்ணாச்சி பயிரிடப்படுகிறது .இதில் உயிர்சத்து A,B1,B2, இருக்கிறது சுதையம் , அயம் , தியாமின் , ரிபோ பிளேவின், நியாசின், மாவுப்பொருள் நார்ச்சத்து முதலியவை உள்ளன அன்னாசி பழம் நன்மைகள் உள்ளன.

அன்னாசிப் பழம்  இனிய சுவையுடைய பலவித சத்தகள் உள்ள பழம். அதே சமயம் உஷணத்தைக் கொடுக்கக் கூடியது.

இந்தப் பழத்தில் ஏ, பி2, சி போன்ற வைட்டமின் சத்துகளுடன் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் அடங்கியுள்ளன.

அன்னாசிப் பழத்தின் மேல் தோலை நன்றாக சீவி எடுத்துவிட்டு வில்லைகளாக்கிச் சாப்பிட வேண்டும். அந்த வில்லைகளில் இரண்டு எடுத்து அதில் சிறிது தேன் கலந்து தினசரி பகல் உணவிற்குப் பின்னர் சாப்பிட்டால் உடல் வலிமையும், வனப்பும் பெறும்.

அன்னாசிப்பழத்தைச் சாப்பிடுவதால் பித்தம் சம்பந்தமான நோய்கள் அகலும், ஜீரண சக்தி அதிகரிக்கும்.

அன்னாசிப் பழ சாறுடன் பால் கலந்து தினசரி குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும். தவிர தோல் சம்பந்தமான வியாதிகளுக்கும் மிகவும் நல்லது.

களைப்பு அதிகமாக இருந்தால் அன்னாசிப் பழச் சாறுடன் பால் கலந்து குடித்தாலும் புதுத்தெம்பு உண்டாகும்.

இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டால் கண் தொடர்பான நோய் குணமாகும். உடல் பொலிவுடன் ஆரோக்கியத்துடன் இருக்கக் கீழ்க்காணும் முறையில் தயார் செய்த தினசரி சாப்பிட்டுவந்தால் நோய் அணுகாது.

அன்னாசி பழம் நன்மைகள் pineapple benefits in tamil

அன்னாசிப் பழத்தின் தோலை நன்றாக சீவி எடுத்துவிட்டு துண்டு களாக நறுக்கிச் சுத்தமான பாத்திரத்தில் போட்டு மத்தினால் நன்றாக நைய இடித்துச் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும் அன்னாசி பழம் நன்மைகள் pineapple benefits in tamil.

அவ்வாறு எடுக்கப்பட்ட சாறின் அளவுக்கு வெள்ளை சர்க்கரையைச் சேர்த்து மொத்த அளவில் கால்பங்கு நீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்ச வேண்டும். நீர் வற்றிப் பாகு பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆறவைத்துக் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

READ HERE  ஆப்பிள் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா

தினசரி காலை சிற்றுண்டிக்குப் பின்னர் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு அவுன்ஸ் அளவுக்கு பாட்டிலில் உள்ள லேகியத்தை எடுத்துக் கலந்தால் சர்பத் போல ஆகிவிடும். இதனைக் குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தி நோய்கள் அணுகாது பாதுகாக்கும்.

அன்னாசி பழம் நன்மைகள் (pineapple benefits in tamil)

அன்னாசி பழம் நன்மைகள் pineapple benefits in tamil

 1. அன்னாசி பழம் கண், காது , தொண்டை , சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணமாக்கும்.
 2. தலைவலி, மூளை கோளாறு, நினைவாற்றல் குறைவு, கிறுகிறுப்பு , முதலானவற்றை குணப்படுத்தும் .
 3. அன்னாசி பழம் இரத்தத்தை உற்பத்தி செய்யும் , உடல் வலுவாகும் , பித்தம் , களைப்பு, சோர்வு , தாகம் , முதலியவை அகற்றும் .
 4. கருவுற்ற தாய்மார்களுக்கு ஆரம்பநிலையில் அண்ணாச்சி பழம் கருவை கலைக்கும். வளர்ந்த முற்றிய கருவுக்கு துணை செய்து குழந்தை சக்தியுடன் பிறக்க உதவும்.
 5. அன்னாசிப்பழம் மூத்திரக் கோளாறுகள் செரிமான கோளாறுகள், நீக்கும். அன்னாசி பழம் சாற்றை தோல் வியாதிகளுக்கு மேலே தடவலாம். கால் ஆணிகளையும் , வெண்குஷ்டத்தை யும் நீக்கும்.
 6. பழுக்காத அன்னாசி பழம் வயிற்றுக்கு கெடுதல் செய்யும் .செரிமானக் குறைவு ஏற்படுத்தும்.
 7. இந்த பழத்தை சூடு தரும் பழம் என்று சொல்வது உண்டு .ஆனால் உண்மையில் இது குளிர்ச்சி நிறைந்த பழமாகும் .
 8. வைட்டமின் ஏ , பி , சி , மற்றும் சுண்ணாம்புச்சத்து , இரும்புச்சத்து , ஆகியவைகளும் இடம்பெற்றுள்ளன .
 9. கோடை நாட்களில் இது குளிர்ச்சியை தருவதோடு பலவிதமான நோய்களையும் குணப்படுத்துகிறது.
 10. மலக்கிருமிகளை அழிக்கும் சக்தி இப்பழத்திற்கு உண்டு சீதபேதியை குணப்படுத்தும் ஆற்றலையும் கொண்டு சிறப்படைகிறது .
 11. இரத்தத்தை சுத்தம் செய்யும் பழங்களில் இந்த பழமும் ஒன்றாகும்.மேலும் ரத்த விருத்திக்கும் இந்த பழம் தூண்டிவிடுகிறது.
 12. வயிற்று கடுப்பை குணப்படுத்தவும் இந்தப் பழம் நல்ல மருத்துவப் பொருளாகும். ஜீரண சக்தியை உண்டாக்கி நல்ல பலத்தையும் அளிக்கிறது.
 13. சிலர் தொடர்ந்து வாந்தியெடுத்துப் பெருந்துன்பம் அடைவார்கள்.அவர்களுக்கு இந்தப் பழத்தின் துண்டுகளை சாப்பிட்டதும் குணம் கிடைக்கும்.
 14. ஆயுர்வேத மருந்துகளில் சேர்க்கப்படும் பழங்களில் இதுவும் ஒன்றாகும்.
 15. இரத்த சோகை , மஞ்சள் காமாலை , வயிற்றுக் குமட்டல் போன்றவற்றையும் இந்த பழம் குணப்படுத்துகிறது.
 16. இருதய பலவீனம் உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த படத்தை உட்கொள்ளவேண்டும்.
 17. நினைவாற்றல் இல்லாதவர்கள் தொடர்ந்து இப்பழத்தை உண்டு வரவேண்டும்.
 18. மூளை கோளாறு உள்ளவர்களுக்கும் இது நல்ல மருத்துவப் பொருளாகும், இவர்கள் தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
 19. தாகத்தை தணிக்கும் குணம் கொண்டு சிறந்து விளங்குகிறது. குடல் புழுக்களை வெளியேற்ற இதை விடவும் சிறந்த பழம் வேறு இல்லை என்றும் கூறலாம்.
 20. பழத்தின் மேல் தோலை பக்கமாக வெட்டி அப்புறப்படுத்திவிட்டு மத்தியில் உள்ள வெள்ளை சிறுதுண்டு பகுதியை அப்புறப்படுத்தி துண்டு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் இரவு நேரத்தில் வைத்து கொஞ்சம் சர்க்கரையையும் தூவி விடவேண்டும் .காலையில் பார்த்தால் பழத்தின் சாறும் சர்க்கரை சத்து கலந்து காணப்படும். சர்க்கரை கலந்த அந்த நீரையும் ஒன்றிரண்டு துண்டுகளையும் தின்று வந்தால் குடல் புழுக்கள் மறுநாள் காலையில் வெளியேறி விடும் .
 21. சிறுவர்கள் குடல்புழு தொல்லையால் பெரிதும் அவதியுறுவார்கள் .சர்க்கரை நீர் கலந்த அன்னாசி பழ துண்டுகளை குழந்தைகள் விரும்பி உட்கொள்வதால் இம்முறை மூலம் குடல் புழுக்களை வெளியேற்றிவிடலாம் .
 22. பித்தக் கோளாறுகளைப் போக்கவும் அன்னாசி பழம் பெரும் பங்கு வகிக்கிறது.இருதய கோளாறுகளை போக்கிட நாள்தோறும் 100 கிராம் அளவினது உட்கொள்ளவேண்டும்.
 23. இப்பழத்தைத் துண்டுகளாக வெட்டி தேனில் தோய்த்து தொடர்ந்து ஒரு மண்டலம் உண்டால் தேகத்தில் புதிய பொலிவு ஏற்படும் .
 24. மூத்திர பையில் உள்ள கற்களை அகற்றுவதற்கும் இப்பழத்தின் சாறு நல்ல மருந்தாகிறது.
 25. தொண்டை புண்ணை குணப்படுத்தவும் இப்பழம் நல்ல மருந்தாகிறது.
 26. இப்பழத்தின் சாறு எடுத்து தொண்டையில் உள்ள புண்ணில் படும்படி கொப்பளித்து வரலாம்.

“அன்னாசி பழம் நன்மைகள் pineapple benefits in tamil”

“அன்னாச்சி பழம் – மருத்துவ குணங்கள் “

“அன்னாசி பழத்தின் 8 ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here