பலா பழத்தின் மருத்துவப் பயன்கள் – Palapalam Benefits

0
554

பலாப்பழம் நன்மைகள்

பலாப்பழம் நன்மைகள் palapalam benefits in tamil jackfruit பலாப் பழம் மிகவும் சுவையுடையது என்பதினால் எல்லாருமே விரும்பிச் சாப்பிடுவார்கள். ஆகையினால் இதனையும் பெருமளவில் வளர்க்கின்றனர். பலாமரத்தன் இலை பளபளப்புடன் கரும்பச்சை நிறத்தில் இருக்கும்.இதன் பழம் உருளை வடித்தில் இருக்கும். அதன்மேல் முள் உள்ளதாக இருக்கும். அதன் உள்ளே மஞ்சள் நிறத்தில் கொட்டையுடன் இனிய பலாச் சுளைகள் இருக்கும். பலா மரத்தின் இலை, பிஞ்சு, காய், பால், வேர் ஆகியவைகள் எல்லாம் மருத்துவக்குணமுடையதாகும்.

பலாப்பழம் நன்மைகள் –

Palapalam benefits in tamil

 

தாது விருத்திக்குப் பலாப் பிஞ்சு

பலாப் பிஞ்சை சமைத்து உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் தாது விருத்தியாகும். பித்த நோய்கள் அகலும். பசிமந்தம் இருப்பின் நீங்கிவிடும்.

பசிதணிய, சுவாசம் மிக

பலாக்காயை சமைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் பசி தணியும், சுவாசம் மிகும்.

மலச்சிக்கலுக்கு

மலச்சிக்கல் பிரச்சனை

பலாப் பழத்தைச் சிறிய அளவில் சாப்பிட்டால் மலச்சிக்கல் அகலும். ஆனால் பலாப் பழத்தை அதிக அளவில் உண்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல.

கட்டி உடைய

சில சமயம் கட்டி வந்தால் பழுதது உடையாமல் துன்பத்தைக் கொடுக்கும். ஆகையினால் பலாப்பழத்தைக் காடியில் இழைத்து அதன்மேல் பற்றுப் போட்டால் கட்டிப் பழுதது உடையும்.

சிரங்குகள் ஆற

nellikai benefits in tamil நெல்லிக்காய் பயன்கள்

பலா மரத்தின் கொழுந்து இலைகளையோ அல்லது அதன் வேரைபோ மெழுகு பதத்திற்கு அரைத்து அதன்மேல் பூசி வந்தால் விரைவில் சிரங்குகள் ஆறும் பலாப்பழம் நன்மைகள் palapalam benefits in tamil jackfruit

பலாப்பழம்  நன்மைகள்  

முக்கனி என்று தமிழகத்தில் சிறப்பான முறையில் போற்றப்படும் கனி வகைகளில் பலாப்பழமும் ஒன்றாகும். ருசியில் மட்டுமின்றி , மணத்திலும் ஊட்டச்சத்து நிறைவிலும் வாழையைப் போலவும், மாவைப் போலவும் உயர்ந்த இடத்தை பெற்று சிறப்படைகிறது.

பலாப் பழத்தில் நிறைய வகைகள் உண்டு.அவைகளின்  குணநலன்கள் ஒன்றாக இருந்தாலும் சுவைதான் வித்யாசமாகும்.

பலாப்பழத்தில் நமது உடல் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாத வைட்டமின் ஏ யும் சுண்ணாம்புச் சத்தும் அதிக அளவில் உண்டு.

READ HERE  தினமும் ஒரு கையளவு கருப்பு திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

சூட்டையும் , குளிர்ச்சியையும்  கொடுக்கும் அந்த ஆற்றலுள்ள பழமாகும். இது அவரவர் உடல் வாகைப் பொறுத்து குளிர்ச்சியையும், சூட்டையும் தருவதாகும் .

இந்தப் பழத்தை அதிக அளவில் சாப்பிட கூடாது .அதிலும் குறிப்பாக வாத நோய் உள்ளவர்கள் சாப்பிடவே கூடாது .

பலாப்பழச் சுளையை இரவு வேளையில் தேனில் ஊற வைத்துக் காலையில் வெறும்வயிற்றில் சாப்பிட்டால் இருமல், ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

பழ வகைகளிலேயே மிகப்பெரிய தோற்றமுடன் விளங்கும் பலாபழம் வெளியே சொரசொரப்பான தோலைக் கொண்டு திகழ்கிறது. தடிப்பான தோலை அகற்றினால் சடை போன்ற அமைப்புக்குள் இருக்கும் பலாச்சுளைகள் தங்கம் போன்ற பளபளப்புடன் காணப்படும்.

வைட்டமின் பி,  சி போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.சுண்ணாம்புச் சத்தும்,இரும்புச் சத்தும் கொண்டு திகழும் இப்பழம் வாயுவை ஓரளவு உண்டு பண்ணுடையதாக இருந்தாலும், ரத்த விருத்திக்குச் சிறந்து விளங்குவதாகும்.

நரம்புகளுக்கு உறுதியளிக்கும் தன்மை கொண்ட இப்பழம் ,நமது தோலை மிருதுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இரவில் தேனைக் கலந்து வைத்துச் சாப்பிட்ட முடியாதவர்கள் நாட்டு சர்க்கரையைக் கலந்து வைத்து மறுநாள் காலையில் சாப்பிடலாம் அல்லது பசு நெய் கலந்து சாப்பிட வேண்டும்.

தொற்று நோய்களை அறிந்திடும் ஆற்றல் மாம்பழத்தைப் போல இதற்கு உண்டு.

இருதயத்திற்கும் மூளைக்கும் நலம் செய்யும பலாப்பழம் அஜீரணத்தை உண்டு பண்ணும் தன்மை கொண்டதாக.

குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக இதைச் சாப்பிடக் கூடாது குழந்தைக்கு மாந்தம் ஏற்படும்.

அஜீரணத்தால் அவாதிப்படுபவர்களும் நீண்ட நாள் படுக்கையில் இருந்து எழுந்து நடப்பவர்களும் இந்தப் பழத்தைச் சாப்பிடக்கூடாது.

இரவு முழுவதும் தேனில் ஊறிடும் பலாப்பழம் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும் என்றாலும் மிகவும் குறைவாகத்தான் சாப்பிட வேண்டும் .

தொண்டை கட்டு, குரல் கட்டு போன்ற நோயுள்ளவர்கள் பலா சாப்பிடுவதன் மூலம் நல்ல குரல் வளம் பெற்று சிறப்படையலாம்,

நன்றாகத் தித்திப்புள்ள” வடுக்கைப் பலா கூழைப் பலா “ வை விடவும் சுவையாக இருக்குமென்றாலும் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டால் பித்தம் சம்பந்தமான நோய்களை உண்டு பண்ணும் .

READ HERE  நாவல் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா

மயக்கும் மணத்தது. பித்தம் தருவது. கண்ணிற்கு நல்லது,தேனில் சாப்பிட்டால் தீமை குறைவு. குடற்புழுவினை உண்டாகுமா. சுவையன்றி வேறு பலனில்லை,

இஃது  இந்தியா முழுமையும், தானாகவும் ,மக்களால் பயிரிடப்பட்டும் வளரும் பழமரம். ஆசினிப்பலா ,கூழைப்பலா ,வருக்க்ப்பலா எனச் சில வகையுண்டு .

சக்கை , பலவு , பலாசம் , வருக்கை , ஏகறவல்லி என்ற மாற்றுப் பெயர்களும் உண்டு . முகனிகளில் இரண்டாம் இடத்தை வகிப்பது.

பலாப்பழம்  பயன்படும் உறுப்புகள்

இலை , காய்,  பழம்,  விதை , பால் , வேர் ஆகிய அனைத்தும் ஆகும். பழம் இனிப்பு சுவை. மற்ற எல்லாம் துவர்ப்பு சுவை கொண்டவை.

கருக்கிய  பலாக்கொட்டை , அள்ளுநோயை உண்டுபண்ணும் பலாப்பழம் வாதத்தைப் போக்கும் பலா இலையில் உணவு உண்ட பின் நீர் வேட்கையால் நீக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here