வெங்காயம் பயன்கள் – Onion Benefits
வெங்காயம் பயன்கள் onion benefits in tamil சமையல் வகையில் மற்றப் பொருள்களைவிட வெங்காயத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வெங்காயத்தில் பலவகை உண்டு என்றாலும், பொதுவாக மூன்று வகையான வெங்காயங்கள் தான் அதிக அளவில் பயன்பட்டு வருகின்றன.
சிறிய அளவில் ஒன்றுக்கு மேற்பட்ட பல பூண்டுகள் இணைந்து ஒரு பூண்டாக இருக்கும் வெங்காயத்திற்கு, நாட்டு வெங்காயம் அல்லது சாம்பார் வெங்காயம் என்று பெயர்.
பெரிய அளவில் பம்பரம் போன்ற உருவத்தில் சிவப்பு, வெண்ணிறமான தோலுடன் கூடிய வெங்காயத்திற்கு பெரிய வெங்காயம் அல்லது பெல்காரி வெங்காயம் என்று பெயர். இந்த இருவகையான வெங்காயத்திலும் வெண்ணிறமான தோலுடன் கூடிய வெங்காயத்தை வெள்ளை வெங்காயம் என்று கூறுகின்றனர்.
இதிலும் சிறிய அளவில் பம்பரம் போன்ற வடிவத்தில் ஒரே பூண்டாக இருக்கும். வெண்ணிறத் தோலுடன் கூடிய வெங்காயத்தைத்தான் மருத்துவ முறைக்கும் பயன்படுத்துகின்றனர் வெங்காயம் பயன்கள் onion benefits in tamil.
வெங்காயத்தின் மேல் தோலை உரித்தால் உள்ளே கனத்த சதைப்பற்றுள்ள ஒரு தோல் மூடிக் கொண்டிருக்கும். அதை உரித்தால் அதையடுத்து ஒரு கனத்த தோல் இருக்கும் வெங்காயத்தை உரிக்க, உரிக்க தோல் வந்துக் கொண்டே இருக்கும். கடைசி வரை தோலிருக்கும்.
இந்தத் தோல் கனத்து ஒருவகையான நீர்ப்பசை நிறைந்ததாக இருக்கும். இந்த நீர் காரமும், ஒருவகையான தெடியும் கூடியதாக இருக்கும்.
இந்த நெடி வெகுவேகமாக காற்றுடன் கலக்கக்கூடியதாக இருக்கிறது வெங்காயத்தை நறுக்கும் பொழுது சிலருக்குக் கண்களில் நீர் பெருக்கெடுக்கும். அழுவது போல கண்களில் நீர்வடியும், கண்களில் எரிச்சல் உண்டாகும்.
வெங்காயத்தைச் சமையல் வகைக்குத்தான் அதிக அளவில் பயன்படுத்துகிறோம். ஆனால் வெங்காயம் உணவு வகையில் சிறந்ததாக இருப்பது போல, வைத்திய முறையிலும் சிறந்து விளங்கக்கூடியதாக இருக்கிறது.
தொற்றுநோய்க் கிருமிகளை அழிக்கக்கூடிய சத்தி தாவர வர்க்கத்தில் உண்டு என்றாலும் வேகமாக விஷக்கிருமிகளைக் கொல்லும் சக்தி வெங்காயம் ஒன்றுக்குத்தான் உண்டு onion benefits in tamil.
நம் நாட்டு வெங்காயத்தின் அருமை பெருமைகளை அறிந்த மேனாட்டினர் வெங்காயத்தைப் பல வகையில் ஆராய்ந்து அதன் ஓளஷத குணத்தை அறிந்து அதைப் போற்றி வருகின்றனர்.
இப்போது உண்டானதல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. இதன் அரிய சக்திகளை அக்காலத்திலேயே நன்கு அறிந்திருக்கின்றனர்.
ஆதிகால வைத்திய நூல்களிலுள்ள வெங்காயத்தைப் பற்றிய ஆதிகால வரலாறுகளை விளக்கப்புகின் பக்கங்கள் தேவைப்படும். எனவே அதை விடுத்து நமக்குத் தேவையான விஷயத்தைக் கவனிப்போம்.
இதனை சமையலில் அடிக்கடி சேர்த்து உண்ணுகிறோம். சின்ன வெங்காயத்தைச் சாம்பார் செய்து உணவுடன் சேர்த்துக் கொண்டால் மிகச் சுவையாக இருக்கும்.
வெங்காயம் ஒரு கிருமிநாசினியாகவும் பயன்படுவது. மருத்து வத்தில் நற்பயனை அளிப்பதாவும் விளங்குகிறது வெங்காயம் பயன்கள் onion benefits in tamil.
வெங்காயம் பயன்கள் (onion benefits in tamil)
தொற்றுநோயை தடுக்க
காலரா என்ற வாந்திபேதி, வைசூரி என்ற அம்மை போன்ற வியாதிகள் வாரில் பரவிவரும் சமயம், சாம்பார் வெங்காயத்தில் 10-16 எடுத்து, தோலை உரித்துவிட்டு அதை இரண்டாக நறுக்கி ஒரு மாலில் மாலை போல் கோர்த்து வீட்டின் உள்ளே கட்டித் தொங்க விட்டிருந்தால், அந்த விட்டிற்குள் புகுந்த தொற்று நோய்க் கிருமிகளை வெங்காயம் தன்வசம் இழுத்து அழித்து விடும்.
வெங்காயத்தின் தோலை உரித்துவிட்டு மூன்று அல்லது நான்கு வெங்காயத்தைச் சட்டைப் பையிலோ, வேஷ்டி மடியிலோ வைத்துக் கொண்டு எங்கு சென்றாலும் தொற்றுநோய் பற்றிப் பயப்படத் தேவையில்லை.
ஆனால் இவ்விதமாக உபயோகப்படுத்தும் வெங்காயத்தைத் தினசரி தூர எறிந்துவிட்டு, புதியதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேள் கொட்டுக்கு வெங்காயம் பயன்கள்
தேள் கொட்டியவுடன் சாம்பார் வெங்காயத்தில் ஐந்து எடுத்து வைத்துக் கொண்டு ஒரு வெங்காயத்தை இரண்டாக நறுக்கி ஒரு பகுதியில் வெட்டப்பட்ட பாகத்தை தேள் கொட்டிய இடத்தில் வைத்து நன்றாகத் தேய்க்க வேண்டும். இந்த விதமாக ஐந்து வெங்காயத்தையும் தேய்த்து முடித்தால் தேள் விஷம் நீங்கிவிடும் வெங்காயம் பயன்கள் onion benefits in tamil.
கண் உறுத்தல், கண்வலி, கண் சிவப்பு மாற
வெங்காயத்தை உரலில் போட்டு இடித்துச் சாறுபிழிந்து இரண்டு ஆழாக்குச் சாற்றை எடுத்து ஒரு வாணலியில் விட்டு, அத்துடன் அதேயளவு சிற்றாமணக்கு எண்ணெயையும் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் காய்ச்ச வேண்டும்.
வெங்காயச் சாறு சுண்டி சடபுட சப்தம் நின்றபிறகு எண்ணெயை இறக்கி வைத்துக் கொண்டு, வடிகட்டி ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு, கண்ணில் துளிக்கணக்கில் விட்டு வந்தால் கண் சிவப்பு, கண்வலி, கண் உறுத்தல் இவைகள் மாறிவிடும்.
ஒவ்வொரு தடவையும் கண்களைச் சுத்தம் செய்த பின்னரே எண்ணெயை கண்களில் விடவேண்டும்.
காக்கை வலிப்புக்கு
காக்கை வலிப்பு ஏற்பட்டு கஷ்டப்படுகிறவர்களுக்கு அதை நிறுத்த வெங்காயம் நன்கு பயன்படுகிறது. வெள்ளை வெங்காயத்தை எடுத்து தட்டிச் சாறு எடுத்து, ஒவ்வொரு காதிலும் மூன்று துளிசாற்றை விட்டால் வலிப்பு உடனே நின்றுவிடும். கொஞ்சநேரத்தில் நோயாளி எழுந்திருப்பான்.
வெங்காய தைலம் onion benefits in tamil
வெங்காயம் 50 கிராம், வெந்தயம் 25 கிராம் எடை, சோற்றுக் கற்றாழைச் சோறு 150 கிராம் எடை இவைகளை அம்மியில் வைத்து நன்றாக அரைத்து, ஒரு வாணலியில் போட்டு, அத்துடன் ஒரு லிட்டர் சிற்றாமணக்கு எண்ணெயும் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாகக் காய்ச்ச வேண்டும்.
எண்ணெய் காய்ந்து அதிலுள்ள மருந்துகள் சிவந்து கருகிவரும் நிலை ஏற்பட்டவுடன் வாணலியை இறக்கி வைத்து எண்ணெய் ஆறியவுடன் வடிகட்டி ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு, குழந்தைகளுக்கு அல்லது தேக்கரண்டியும், பெரியவர்கள் ஒன்றரை தேக்கரண்டி வீதமும் தினசரி காலையில் சாப்பிட்டு வந்தால் 18-விதமான கணைச்சூடும் குணமாகும்.
உஷ்ண வயிற்று போக்கு நிற்க
10கிராம் வெங்காயத்தை எடுத்து அம்மியில் வைத்து நைத்து ஒரு சட்டியில் போட்டு, 5 கிராம் எடை சீரகம், இரண்டு கைப்பிடியளவு இலந்தயிலை இவைகளையும் நைத்துப் போட்டு இரண்டு ஆழாக்களவிற்கு தண்ணீர் விட்டு ஆழாக்களவிற்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி காலை, மாலை வேளைக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வந்தால் உஷ்ண வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
சீதபேதி குணமாக வெங்காயம் பயன்கள்
அடுப்பில் வைத்து மூன்று தேக்கரண்டியளவு நெய்யை விட்டு 20கிராம் எடை வெங்காயத்தை நீளவசமாக மெல்லிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொண்டு, ஒரு வாணலியை நெய் காய்ந்தவுடன் அதில் போட்டு,
வெங்காயம் நன்றாகச் சிவந்து வந்தவுடன் ஒரு கோழி முட்டையை உடைத்து அதில்விட்டு நன்றாகக் கிளறி முட்டை வெந்தவுடன் இரண்டு கரண்டி சுடுசாதத்தையும் அதில் போட்டு நன்றாகக் கிளறி இறக்கி, சாப்பிட்டு விடவேண்டும். பிறகு வழக்கம் போல சாப்பிட வேண்டும். இந்தவிதமாக மூன்று நாட்கள் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
பெரும்பாடு குணமாக
வெங்காயம், தரைபசலைக் கீரை, சீரகம் இவைகளைச் சமஅளவாக எடுத்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து, காலை, மாலையில் கொட்டைப் பாக்களவு வீதம் தொடர்ந்து ஒன்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு குணமாகிவிடும்.
குஷ்டம், கிரந்தி, மேகப்புண் குணமாக
வெங்காயம், நல்ல வேளயிலை, தும்பையிலை இவைகளை ஒரேயளவாக எடுத்து மைபோல அரைத்து குஷ்டம், கிரந்தி, மேகப்புண்களின் மேல் கனமாகத் தடவி வந்தால் புண்கள் ஆறிவிடும்.
வாந்தியை நிறுத்த
வெங்காயத்தை நைத்து அதை முகர்ந்துக் கொண்டே யிருந்தால் வாந்தி வருவது நின்றுவிடும் வெங்காயம் பயன்கள் onion benefits in tamil.
கண் சம்பந்தமான கோளாறுகள் குணமாக
வெள்ளை வெங்காயத்தில் சில துளி எடுத்து அதேயளவு சுத்தமான தேனை சேர்த்துக் குழப்பிக் கண்களுக்குப் போட்டு வந்தால் கண்பார்வை தெளிவடையும், கண்களில் வளரும் சதை கரையும். பூ விழுந்திருந்தாலும் அதைக் கரைத்து விடும்.
நாய்கடி விஷம் நீங்க
நாய் கடித்து இரத்தம் வந்தால் அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டு, கொஞ்சம் வெங்காயத்தை எடுத்து நைத்து அத்துடன் தேன் சேர்த்துப் பிசைந்து கடிவாயில் வைத்துக் கட்டிவிட வேண்டும். இதேபோல மூன்று நாட்களுக்கு கட்டி வந்தால் நாய் விஷம் நீங்கும். புண் ஆறிவிடும்.
இரத்த பேதி நிற்க
ஒரு அவுன்ஸ் வெங்காயச் சாற்றுடன் அரை அவுன்ஸ் அளவு பசுவின் நெய் சேர்த்துக் கலக்கிக் கொடுத்து வந்தால் இரத்த பேதி நின்றுவிடும்.
இரத்த வாந்தி நிற்க
வெங்காயத்தின் காய்ந்த தோலை எடுத்து அதைச் சட்டியில் போட்டு கருக வறுத்து, எடுத்துத் தூள் செய்து 21 கிராம் எடைத் தூளுடன், தேக்கரண்டியளவு தேன் சேர்த்துக் கலக்கி உட்கொண்டால் இரத்த வாந்தி நிற்கும்.
தொண்டை வலி குணமாக
அரை ஆழாக்குத் தயிரில் 10 கிராம் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு தேக்கரண்டியளவு சர்க்கரையும் சேர்த்துக் கரைத்துச் சாப்பிட்டால் தொண்டைவலி குணமாகும் வெங்காயம் பயன்கள் onion benefits in tamil.
இருதயம் பலம் பெற
வெங்காயச்சாறு அரை அவுன்ஸ் எடுத்து தேக்கரண்டியளவு சர்க்கரையைச் சேர்த்துக் கலக்கி காலை, வேளையில் மட்டும் தொடர்ந்து எழுநாள் சாப்பிட்டால் இருதயம் பலம் பெறும்.
வயிற்று போக்கை நிறுத்த
எந்தவிதமான வயிற்றுப் போக்கானாலும் 2 கிராம் வெங்காயம், அதே அளவு அத்திப்பட்டை, அதே அளவு சீரகம் இவைகளைப் பசுவின் பால்விட்டு அரைத்து அரை ஆழாக்குப் பசுவின் பாலிலேயே கரைத்துக் காலை, மாலையாக கொடுத்து வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும் வெங்காயம் பயன்கள் onion benefits in tamil.
வாய்வு எடுபட
ஐந்து கிராம் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி அதில் தேக்கரண்டியளவு தேன் விட்டுக் கலந்து காலையில் மட்டும் தொடர்ந்து எழுநாள் சாப்பிட்டால் வாய்வு எடுபட்டுவிடும்.
கட்டிகள் உடைய
இரத்த கட்டி அல்லது வேனல் கட்டித் தோன்றி பெரியதாக வந்ததும் பழுத்து உடையாமலிருந்தால் வெங்காயத்தை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பற்றுப் போட்டு வந்தாலும், கட்டக்கூடிய இடமானால் கட்டுப் போட்டு வந்தாலும் கட்டி பழுத்து உடையும்.
சூதகச் சிக்கல்
சில பெண்களுக்கு மாதாந்திர சரிவர இறங்குவதில்லை. இதனால் பலசங்கடம் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் சாம்பார் வெங்காயத்தில் மூன்று எடுத்து, காலைவேளையில் மட்டும் வாயில் போட்டு மென்று தின்று விடவேண்டும்.
இந்தவிதமாகத் தொடர்ந்து எழுநாள் சாப்பிட்டு வந்தால் சூதகச் சிக்கல் தீரும். சூதகம் வெளியாக சுமார் ஏழுநாட்களிருக்கும் பொழுதிலிருந்தே வெங்காயம் தின்ன ஆரம்பிக்க வேண்டும்.
நீர்க்கடுப்பு குணமாக
ஆழாக்களவு நீராகாரத்தில் ஒரு அவுன்ஸ் அளவு வெங்காயச் சாற்றை விட்டுக் காலையில் மட்டும் தொடர்ந்து மூன்று நாள் சாப்பிட நீர்க்கடுப்புக் குணமாகும்.
மயக்கம் தெளிய onion benefits in tamil
சிலருக்கு சிலசமயம் திடீரென, மயக்கம் வந்துவிடும். எந்தக் காரணத்தினால் மயக்கம் வந்தாலும் சரி, வெங்காயத்தையும், சீரகத்தையும் நைத்து மூக்கின் அருகே பிடித்து இந்த வாசனையை நன்றாகச் சுவாசிக்கும்படிச் செய்துக் கொண்டே இருந்து முகத்தில் சில்லென்ற நீரைத் தெளித்தால் மயக்கம் உடனே தெளியும்.
கீல்வாதம் குணமாக வெங்காயம் பயன்கள்
அரை அவுன்ஸ் வெங்காயச் சாற்றுடன் அரை அவுன்ஸ் அளவு கடுகு எண்ணெய்ச் சேர்த்து நன்றாகச் சூடேற்றி வலியுள்ள இடத்தில் நன்றாகச் சூடுபறக்கத் தேய்த்தால் கீல்வாதம் குணமாகும்.
குழந்தைகளுக்கு வெங்காய கணை எண்ணெய்
வெள்ளை வெங்காயம், கருஞ்சீரகம், கடுகுரோகிணி, கடுக்காய்த் தோல், திப்பிலி, ஓமம் இவைகளை வகைக்கு 5 கிராம் எடை எடுத்து, வெங்காயம் தவிர மற்றவைகளை எல்லாம் அம்மியில் வைத்துத் தூள் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இரண்டாழாக்களவு சிற்றாமணக்கெண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து நன்றாகக் காய்ச்ச வேண்டும்.
எண்ணெய் நன்றாகக் காய்ந்து மருந்துகள் சிவந்து வரும் சமயம் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி அதில் போட்டு வேகவிட வேண்டும்.
எல்லாமாக நன்றாக வெந்து சிவந்து கருகும் சமயம் பாத்திரத்தை இறக்கி வைத்து ஆறியபின் வடிகட்டி ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு அரைச்சங்களவு எண்ணெயுடன் அதே அளவு தாய்ப்பால் விட்டுக் கலக்கி காலையில் மட்டும் தொடர்ந்து ஏழுநாள் கொடுத்து வந்தால் எல்லாவகையான கணை நோயும் குணமாகும்.
கரப்பான் குணமாக எண்ணெய்
குழந்தைகளுக்கு ஏற்படும் எல்லா வகையான கரப்பானும் குணமாக கீழ்க்கண்ட எண்ணெய் தயாரித்துக் கொடுத்து வரவேண்டும்.
வெங்காயச் சாறு, வெற்றிலைச் சாறு வகைக்கு ஆழாக்களவு எடுத்து ஒரு பாத்திரத்தில் விட்டு, அத்துடன் அரைக் கிலோத் தேங்காய்ப் பாலும் சேர்த்து, 5 கிராம் திப்பிலியையும் அரைத்துப் போட்டுக் கலக்கி, பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்றாகக் காய்ச்ச வேண்டும்.
எல்லாமாகக் காய்ந்து, சப்புடா என்ற சப்தம் அடங்கி அதிலுள்ள சரக்குகள் சிவந்து கருகும் சமயம் அதில் எண்ணெய் நிற்கும்.
இந்த சமயம் பாத்திரத்தை இறக்கி வைத்து ஆறியபின் வடிகட்டி ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு தினசரி காலையில் மட்டும் அரைச் சங்களவு கொடுத்து வந்தால் எல்லாவிதமான கரப்பானும் குணமாகும்.
பற்று படை குணமாக வெங்காயம் பயன்கள்

வெங்காயச் சாற்றை எடுத்து, கொஞ்சம் வெள்ளைப் பூண்டுடன் சேர்த்து மைபோல அரைத்து, அதை எடுத்து பற்று, படை உள்ள இடத்தைச் சுத்தம் செய்து விட்டு காலை, மாலை போட்டு வந்தால் பற்றுப்படை இருந்தயிடம் தெரியாமல் மறையும்.
மாந்தம் குணமாக வெங்காயம் பயன்கள்
குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் குணமாக கீழ்க்கண்ட மருந்து நன்கு பயன்படும். வெள்ளை வெங்காரம், முடக்கொத்தானிலை இவை இரண்டையும் சம அளவாக எடுத்து, ஒரு சட்டியில் போட்டு வெதுப்பி, கையில் வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு அரைச் சங்களவு எடுத்து அதே அளவு தாய்ப்பால் சேர்த்துக் காலை, ஐந்து நாள் கொடுத்தால் எல்லாவிதமான மாந்தமும் குணமாகும்.
மூக்கில் இரத்தம் வருவது நிற்க
சிலருக்குச் சிலசமயம் மூக்கில் இரத்தம் வருவதுண்டு. இதை நிறுத்த வெங்காயம் பயன்படுகிறது onion benefits in tamil.
காலைவேளையில் சாம்பார் வெங்காயம் மூன்று எடுத்து, தோலை உரித்துவிட்டு கொஞ்சம் உப்பையும் சேர்த்து வாயில் போட்டு நன்றாக மென்று தின்று விடவேண்டும்.
இந்த விதமாகத் தொடர்ந்து ஏழுநாள் சாப்பிட்டால் போதும். மூக்கில் இரத்தம் வருவது நின்றுவிடும்.
பல்வலி குணமாக
எந்தக் காரணத்தினால் பல்வலி ஏற்பட்டாலும் ஒரு வெங்காயத்தை எடுத்துப் பொடியாக நறுக்கி அதை வலியுள்ள பற்களைச் சுற்றி வைத்துக் கொண்டு வாயை மூடியபடி இருந்தால் கொஞ்ச நேரத்தில் பல்வலி நின்றுவிடும்.
மலச்சிக்கல் நீங்க
இரவு சாதம் சாப்பிடுமுன் ஐந்து சாம்பார் வெங்காயத்தை எடுத்து அதை நீளமாகப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் ஒரு தேக்கரண்டியளவு சிற்றாமணக்கெண்ணெய் விட்டு அது காய்ந்தவுடன் இந்த நறுக்கிய வெங்காயத்தை போட்டு கொஞ்சம் உப்புத் தூள் சேர்த்து சிவந்தவுடன் எடுத்து சுடுசாதத்துடன் சேர்த்து முதலில் சாப்பிட்டுவிட்டு பிறகு சாதம் சாப்பிட வேண்டும். இப்படிச் செய்தால் மலம் இலகுவாக இறங்கும் வெங்காயம் பயன்கள் onion benefits in tamil.
நல்ல தூக்கம் வருவதற்கு
சிலருக்கு இரவு வேளையில் படுக்கையில் படுத்தால் தூக்கமே வராது. வெகு நேரத்திற்கு பின்னரே தூக்கம் வரும்.
இப்படிப்பட்டவர்கள் இரவு சாப்பிடுவதற்கு முன் ஐந்து வெங்காயத்தை தனியே உப்புப் போட்டு வேகவைத்து அந்த வெங்காயத்தையும் தண்ணீரையும் இரண்டு கப் சுடுசோற்றுடன் கலந்து முதலில் சாப்பிட்டு, பிறகு எப்போதும் போல வழக்கமான சாதம் சாப்பிட்டு வந்தால் இரவில் நல்ல தூக்கம் வரும்.
கண்வலி, கண் எரிச்சல்
கண்வலி, கண் எரிச்சல் இருந்தால் வெங்காயச் சாறு ஒரு தேக்கரண்டியும், பன்னீர் ஒரு தேக்கரண்டியும் எடுத்து ஒன்றாகச் சேர்த்து சுத்தமான வெள்ளைத் துணியில் நனைத்து கண்களை மூடிக்கொண்டு அதன் மேல் போட்டு வைத்தால் கண் சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் கண்கள் குளிர்ச்சி பெறும்.
இருமல் தொல்லை
புகை பிடிப்பவர்களுக்குக் கபம்கட்டி இருமல் தொல்லை இருந்தால் தினசரி நான்கு வேளைக்கும் 15 மில்லி வீதம் கொடுத்தால் உடனடியாகக் குணமாகும்.
உடலில் ஏற்படும் கட்டி பழுக்காமல் உபாதை கொடுத்தால் வெங்காயத்தை நெருப்பில் சுட்டு உடலில் உண்டான கட்டியின் மேல் வைத்து சுத்தமான துணியினால் கட்டினால் விரைவில் கட்டி பழுத்து உடைந்துவிடும் வெங்காயம் பயன்கள் onion benefits in tamil.
மூலநோய்
மூலநோயால் பாதிக்கப்பட்டு வேதனை அனுபவிப்பவர்கள் கீழ்க் காணும் வகையில் லேகியம் தயார் செய்து சாப்பிட்டால் நன்கு குணமாகும்.
வெங்காயம் 10, சீரகம்2 தேக்கரண்டி கசகசா 2 தேக்கரண்டி திராட்சை 10, இஞ்சி 1 துண்., கருப்பட்டி வெல்லம் 100 கிராம், நெய் 50 கிராம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
வெங்காயத்துடன் கசகசா, திராட்சை, இஞ்சி ஆகியவற்றைச் சேர்த்து விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும் onion benefits in tamil.
பின்னர் கருப்பட்டி வெல்லத்தைப் பாகு பதத்தில் காய்ச்சி அரைத்த விழுதை அதில் கலந்து நெய்யை ஊற்றி நன்றாகக் கிளறி லேகிய பதத்தில் எடுத்து சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். தினசரி காலையில் எழுந்ததும் ஒரு நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் மூல நோய் விரைவில் குணமாகும்.
மூலநோய்க்கு மற்றொருமுறையும் உண்டு. வெங்காயத்தில் வெள்ளை வெங்காயம் ஒன்று உண்டு. அந்த வெள்ளை வெங்காயத்தை வாங்கி வந்து மேல் தோலை உரித்துவிட்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அதில் நெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி உண்ண வேண்டும். இது மூலச்சூடு, மூலநோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது வெங்காயம் பயன்கள் onion benefits in tamil.