நெல்லிக்காய் பயன்கள் – Nellikai Benefits
nellikai benefits in tamil நெல்லிக்காய் பயன்கள் நெல்லிக்காய் சாப்பிடாதவர்கள் எவரும் இருக்க முடியாது. காரணம் பள்ளிப் பருவத்தில் எல்லாரும் சாப்பிட்டிருப்பார்கள். நெல்லிக்காயில் இருவகை உண்டு ஒன்று அருநெல்லி, மற்றொன்று பெருநெல்லி எனப்படும்
அருநெல்லிக்காய் சாப்பிட்டால் இருமல், தொண்டைக்கம்மல், சளி, சீதள தொடர்பான நோய்கள் வருகின்ற வாய்ப்பு உள்ளது. பெருநெல்லிக்காய் ஊறுகாய் தயாரிக்கவும், மருந்து தயாரிக்கவும் பயன்படுகிறது.
இதில் இரும்புச் சத்தும், வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளன. ஆதலின் சித்த வைத்தியர்கள் நெல்லிக்காய் லேகியம் தயாரித்துத் தருகின்றனர்.
நெல்லிக்காயை சாதத்துடன் அடிக்கடிச் சேர்த்து வந்தால் நோய் தடுப்பு மருந்தாகச் செயல்பட்டு உடல் நலத்தைக் காக்கும்
Amla with honey benefits in tamil

இக்காயினை ஊறுகாயாக தயாரித்தோ, பிழிந்து சாறு எடுத்தோ அல்லது லேகியமாக கிளறியோ சிறுவர்களுக்குக் கொடுத்துவர (தேன் சேர்த்து) களைப்புண்ட நிலைமாறி உடல் வலிவு கூடும் nellikai benefits in tamil நெல்லிக்காய் பயன்கள்.
நெல்லிக்காய் ஊறுகாய் பயன்கள்
நெல்லிக்காய் ஊறுகாயைத் தினசரி சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலே ஏற்படாது. மலத்தை இளக்கி வெளியேற்றும்.
காயை நசுக்கி, சாறு பிழிந்து சர்பத் ரூபமாக காய்ச்சிக் குடித்துவர, வாயுத் தொல்லைகள் குறையும். உடல் அசதி மறையும்.
நெல்லிக்காய் எப்போது சாப்பிட வேண்டும்

சுத்தமான தேனில் நெல்லிக்காயைப் போட்டு ஊற வைத்துப் பல நாட்கள் கழித்து எடுத்து தினசரி காலை வெறும் வயிற்றில் சிறிது சாப்பிட்டுப் பாலைக் குடித்தால் வீரிய சக்தி ஏற்பட்டு இளமையை உண்டாக்கும்.
நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை

- nellikai juice benefits in tamil நெல்லிக்காய் ஜூஸ், தேனையும் சம அளவு கலந்து உட்கொள்ள நெடுநாள் பட்ட விக்கல் விலகி ஓடும். மூச்சுத்திணறல் சமனப்படும்.
- நெல்லிக்காய் ஜூஸ் வெந்துபோன உறுப்புகள் குணமடையும் ரத்தத்தில் கலந்துள்ள விஷப் பொருள்கள் வெளியேறும் நெல்லிச் சாறு கிடைக்கவில்லை என்றாலும் நெல்லி சூரணத்தையோ நெல்லி லேகியத்தையோ தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இதனால் மது அருந்தியதால் ஏற்பட்ட உடன் உறுப்பு பாதிப்புகள் சீர் பெறும்.
- தேள், பாம்பு சிலவகை வண்டுகள் விஷம் பொருந்தியவை அவை கடித்து விட்டால் உடலின் விஷம் ஏறி உயிருக்கே உலை வைத்து விடலாம்.
- அதனால் கடிபட்ட உடன்’ பச்சை வாழைப் பட்டையை நறுக்கி இடித்து சாறு எடுத்து அத்துடன் , நெல்லிக்காய் ஜூஸ் கலந்து கடிப்பட்டவருக்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு அதிகமகக் கொடுக்க வேண்டும். இதனால் விஷம் விரைவில் மறைந்த விடும்.
- நெல்லிச்சாறு விதை நீக்கிய நெல்லிக்கனிகளுடன் எலுமிச்சை இலையை சேர்த்து அரைத்து அதைப் பாலுடன் சேர்த்து நரை விழுந்த பகுதியில் அழுத்தி தேய்த்து ஒரு மணி நேரம் ஊறிய பின் குளித்து வந்தால் நரை நீங்கும் .
- நெல்லிக்காய் ஜூஸ் தலைக்கு வழக்கமாக உபயோகித்து வரும் எண்ணெயுடன் சம அளவு எடுத்து கலந்து நன்கு காய்ச்சி தலை முழுக்காடிவர மயிர்க்கால்கள் உறுதிப்பட்டு முடி உதிர்வது தடைபடும். மேலும், கேசம் ஆரோக்கியம் பெற்றதாக நன்கு வளரும்.
- பித்தம் சம்பந்தப்பட்ட நோய்களை தீர்க்க நெல்லிக்காய் ஜூஸ் தேன் கலந்து அருந்தினால் போதும். தேனுக்கு பதிலாக வெல்லத்தையோ , பனங்கற்கண்டையோ கூட உபயோகிக்கலாம்.
- மது அருந்துபவர்களின் உடலின் அதன் நச்சு பரவி இருக்கும். அதனால் அவர்கள் நெல்லிக்கனியை யோ அல்லது நெல்லிக்காய் ஜூஸ் அருந்தி வர நல்லது.
சரவண பிரகாஷ் லேகியம்
அஸதி , சுரம், உழலை , காந்தல், கிராணி வாயு , பொருமல் , இருமல் , காசம் போன்ற நோய்களுக்கென்று தயாரிகப் படுகிறது. சவண பிரகாச லேகியம் , இந்த லேகியம் நெல்லியைக் கொண்டே பிரத்தியோகமாகத் தயாரிக்கப்படுகிறது .
அந்த லேகியத்தை குறிப்பிட்ட நோயாளிகள் தவிர எல்லா வயதினரும் ஆண் – பெண் வேறுபாடின்றி சாப்பிட்டு வரலாம் அதனால் நோய்கள் குணமாவதோடு உடல் ஆரோக்கியமாக இருக்கும் .
நெல்லிக்கனி சித்த ஆயுர் வேத மருத்துவத்தில் மட்டுமின்றி ஏனைய ஹோமியோபதி அலோபதி ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.
இதற்கு விஞ்ஞானப் பெயராக எம்பிலிகா என்று கூறுவர் ஆங்கிலத்தில் இதற்டு) ( Gooseberry) என்று கூறுவர் .
நம் நாட்டில் மட்டுமின்றி வேறு நாடுகளிலும் மருத்துவப் பயன் மிக்கதாய் சிறப்பிடம் பெற்று திகழ்ந்து வருகின்றது.
நீரிழிவு நோய் குணமாக
பொதுவாக நெல்லிச்சாறு கணையத்தில் சிறப்பாக வேலை செய்ய வல்லது. கணையம் வலுப்பெறவும் சீரான இயக்கம் பெறவும் உதவும் ,அதனால் நீரிழிவு நோய்களுக்கு நெல்லிக்கனி சாறு ஒரு வரப்பிரசாதமாகும். நெல்லிச்சாற்றை இனிப்பின்றி அப்படியே அருந்தி வர விரைவில் குணமாகும் nellikai benefits in tamil .
நெல்லிக்காய் பயன்கள் (nellikai benefits in tamil)
இருமல் சளி குணமாக
நீடித்த சளி., இருமல் தொல்லை இருக்குமானால் அதற்குத் திரிபலை சூரணத்துடன் சிறிதளவு மிளகு பொடியுைம் சேர்த்து தேனில் குழைத்து உள்ளுக்கு அருந்தி வர மண்டை சளி குணமாகும் .மூக்கடைப்பும் இதனால் தீரும்.
சொறி சிரங்கு குணமாக

- நெய் இல்லையென்றாலும் அச்சூரணத்தை சிறிதளவு நிரில் கலந்து அருந்தினாலும் போதும் சொறி சிரங்கு புண்களுக்கு மேல் பூச்சாக நெல்லி சூரணத்தைத் தேங்காய் எண்ணெயில் குழைத்துப் போட்டு வரலாம்.
- நெல் விதைகளைக் கூட தூளாக்கித் தேங்காய் எண்ணெய்யில் குழைத்து பூசிவர சொறி சிரங்கு குணமாகும்.
- நாள்பட்ட புண்களின் மேல் விதை நீக்கிய நெல்லிக் கனியை அரைத்து அப்புண்னின் மீது வைத்துத் துணியால் கட்டி வர விரைவில் ஆறும். குழிப் புண்களாக இருந்தாலும் ஆறிவிடும்.
தோல் வியாதி குணமாக
தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளைக் கூட நீக்கவல்லது நெல்லிக்கனி கோடை காலத்தில் நெல்லி அல்லது திரிபலை சூரணத்தை நெய்யில் குழைத்து காலை மாலை இரு வேளை உண்டு வந்தால் உடல் உஷ்ணம் மிகுதிபடாது. அத்தோடு வேர்க்குரு கட்டி தொல்லையும் ஏற்படாது.
பிருங்காமலத் தைலம்
பித்த ரோகம், சிரோ ரோகம், நேத்திர ரோகம் போன்ற நோய்களுக்குப் பிருங்காமலத் தைலம் தயாரிக்கப் படுகிறது. அதற்கு நெல்லிக் கனியின் சாறு .உடல் உஷ்ணத்தை தணித்து குளிர்சியைத் தரவல்லது.
நீலிபிருங்காதி தைலம்
நீலிபிருங்காதி தைலம் என்று ஆயுர்வேதத்தில் ஒரு தைலம் தயாரிக்கிறார்கள். அது முடி உதிர்வதைத் தடுக்கவும் முடி வளரவும் பயன்படுகிறது . அத்தலத்தில் கூட நெல்லிக்கனி சாறு சேர்க்கப்படுகிறது.
கண் சிவப்பு மாற
சிலருக்கு எப்போதும் கண்கள் சிவப்பு நிறத்தில் காணப்படும் அதற்கு நெல்லி விதை ஒரு பங்கும் ஆல்பக்கோடா விதை இரண்டு பங்கும் கடுக்காய் 3 பங்கு சேர்த்து அரைத்து அதைத் தேனோடு கலந்து உள்ளுக்கு அருந்த கண் சிவப்பு மாறும்
Nellikai benefits for hair in tamil
திரிபலை லேகியத்தை உண்டு வந்தால் மயிர்கால்கள் வலிமை பெற்று முடி உதிர்தலை தடுக்கும். அத்துடன் உடல் உஷ்ணமும் தணியும் அந்த தைலத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். முடியில் ஏற்படும் நரையை கூட தடுக்க வல்லது.
மதுவினால் தொல்லை
சிலர் மது பழக்கத்திற்கு ஆளாகி பொருளோடு உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்கின்றனர் .
நீண்டநாள் மது அருந்துபவரின் உடல் உறுப்புகள் பெருமளவு பாதிக்கப் பட்டிருக்கும் முக்கியமாக அவர்களின் நரம்பு மண்டலம் மிகவும் தளர்ச்சி அடைந்திருக்கும் அதனால் தான் மது அருந்துபவர்கள் தள்ளாடுகின்றனர்.
பொதுவாக நெல்லிக்கனி இரத்தத்தை தூய்மைப்படுத்த கூடியது. ரத்தத்திலுள்ள வேண்டாத பொருட்களை வெளியேற்றும் ஆற்றல் உண்டு.
அதனால் ரத்தம் மற்றும் இதய சம்பந்தப்பட்ட நோயாளிகள் நெல்லிக்கனியை எந்த வகையிலாவது தொடர்ந்து சாப்பிட்டால் குணம் பெறலாம். இருதய பலவீனம், மாரடைப்பு , ரத்த அழுத்த , நோயாளிகள் என்று யாவரும் சாப்பிட வல்லது.
சுக்கு வான் இருமல்
சுக்குவான் இருமலினால் அவதியுறும் குழந்தைகளுக்குப் பாலுடன் நெல்லிச் சூரணத்தைக் கலந்து நன்றாகக் கொதிக்க வைத்து அத்துடன் சிறிது நெய் விட்டு கலக்கி உள்ளுக்குக் கொடுத்துவர நல்லது ,இதனால் இருமல் மட்டுப்படும் நாளடைவில் பூரண குணமடையும்.
வயிற்றுக் கடுப்பு குணமாக
வயிற்றுக்கடுப்பு வயிற்றுப்போக்கு மிகுதியான அவதியுறுவோர் நெல்லி அல்லது திரிபலை சூரணத்தைத் தொடர்ந்து அருந்த நோய் பூரணமாக குணமாகும்.
அஜீரண தொல்லையால் துன்புறுவோர் இரவு படுக்கும்முன் நெல்லி சூரணத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிடலாம் .
தேன் கிடைக்காவிடில் சிறிது நீரில் கலந்து சாப்பிட அஜீரணத் தொல்லை நீங்கும். நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தாலே போதும் அவர்களுக்கு அஜிரண சம்பந்தப்பட்ட தொல்லை ஏற்படாது.
பல் ஈறுகள் பிரச்சனை
நெல்லிக்காயை பச்சையாக தின்று வர, பல் ஈறுகள் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். குழந்தைகளுக்கு வரும் கணை நோய்களையும் குணமாக்கும் சக்தி இக்காய்க்கு உண்டு.
மலச்சிக்கல் குணமாக
மலச்சிக்கல் என்பது பொல்லாத நோயாகும் பல நோய்கள் ஏற்பட இதுவே காரணமாகி விடக் கூடும். அவ்வாறு மலச்சிக்கல் உள்ளவர்கள் வேறு மருந்துகளை சாப்பிடும் போது விரும்பத்தகாத வேறு விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் .
அவர்கள் நெல்லி அல்லது திரிபலை சூரணத்தை சிறிதளவு பாலில் கலந்து இரவு படுக்கும் முன் அருந்தி வந்தால் போதும் மலச்சிக்கல் நீங்கி விடும்.
பித்த நோய்
- ஆனால் சக்கரை உபயோகப்படுத்துவதை மருத்துவர்கள் வரவேற்பதில்லை .காரணம் அதற்கு நோய் தணிக்கும் ஆற்றல் இல்லை என்று சொல்லப்படுகிறது ,அத்துடன் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை கூடாது என்ற நிர்பந்தமும் உள்ளது.
- பித்தம் அதிகரிப்பதால் வாய், தொண்டை, போன்ற இடங்களில் புண்களும் எரிச்சலும் ஏற்படுவதுண்டு. அதற்கு நெல்லி மரப் பட்டைகளை நன்றாக அரைத்து தேன் கலந்து உதடுகளை சுற்றிலும் தொண்டையின் மேலும் பற்றாகப் போட்டு வர புண் ஆறி விடும்.
- பித்தம் தணிய நெல்லி இலைகளை நீரில் போட்டு வேக வைத்து கஷாயமாக்கி அருந்தலாம் .ஆனால் நெல்லி இலைகளின் கசாயம் தயாரிக்கும் போது ஆவி போகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
- பித்த சம்பந்தமான வியாதியினால் கஷ்டப் படுகிறவர்கள் தினசரி தொடர்ந்து நெல்லிக்காய் ஊறுகாயைச் சாப்பிட்டு வந்தால் பித்தம் எடுபட்டு வியாதி குணமாகும்.
குடல் பூச்சிகள்

சிறு குழந்தைகளுக்கோ பெரியவார்களுக்கோ வயிற்றில் பூச்சிகள் இருப்பதினால் பசியிருக்காது.
உடலும் சீரான வளர்ச்சி பெறாத .இளைக்க நேரும் , அத்தகையவர் நெல்லி சாறு எலுமிச்சைச் சாறு இரண்டையும் சம அளவில் கலந்து பருகி வந்தால் போதும். திரிபலை சூரணத்தை எலுமிச்சை பழச்சாற்றில் கலந்து பருகினால் கூட வயிற்றுப் பூச்சிகள் அழிந்துவிடும்.
ஜீரண மண்டல கோளாறுகள்
நெல்லிக்கனி சாறு ருசியை தூண்டி பசியை அதிகரிக்க வல்லது ,உண்ட உணவும் எளிதில் ஜீரணமாக உதவக் கூடியது. ஜீரண மண்டல உறுப்புகளின் சிறப்பாக வேலை செய்யக்கூடியது.
நெல்லிக்கனிச்சாறு உமிழ்நீரை அதிக அளவு சுரக்க வைக்கக்கூடியது. அதனால் நெல்லிச்சாற்றை தினம் அருந்த பசித்து உண்டபின் எளிதில் ஜீரணிக்க உதவி புரியும். சிலருக்கு குடலில் புண் ஏற்பட்டு மிகவும் தொல்லை கொடுக்கும்.
அவர்களுக்கு நெல்லிச்சாறு புண்களை ஆற்றும் அரு மருந்தாக பயன்படும், நெல்லி சாற்றுடன் பால் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர புண்கள் பூரணமாக ஆறிவிடும் நெல்லி சூரணம் அல்லது திரிபலை சூரணம் இதில் ஒன்றை சிறிதளவு கோமியத்தில் கலந்து உள்ளுக்கு அருந்தி வர குடல் புண்கள் விரைவில் ஆறிவிடும்.
நெல்லிக்காயைப் பதார்த்தம் செய்வதில்லை. ஊறுகாயாகத் தயார் செய்துதான் சாப்பிட முடியும். வற்றலாக காய வைத்தும் உபயோகிக்கலாம்.
பெரிய அளவுள்ள நெல்லி ஒவ்வொன்றிலும்,
- 0-5 கிராம் வீதம் கால்சியமும்,
- 14.1 கிராம் வீதம் கார்போ ஹைட்ரேட்டும்,
- 0.5 கிராம் புரோட்டீனும்,
- 0.7 கிராம் வீதம் தாதுப் பொருள்களும்,
- 0.1 கிராம் வீதம் கொழுப்புப் பொருள்களும்,
- 0.02 கிராம் வீதம் பாஸ்பரசும் அடங்கியுள்ளது.
மேலும், ஒரு ஆரஞ்சுப்பழத்தில் உள்ளது போல் 20 மடங்கு உயிர்ச்சத்தும் உள்ளது. நெல்லிக்காய் வற்றலாகப் போட்டு உபயோகிக்கும் போது கூட வைட்டமின் உயிர்ச்சத்து ‘C’ பத்திரமாக அழிந்து விடாமல் நிற்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆயுர்வேத மருத்துவ முறையில் பல்வேறு லேகியங்கள், அரிஷ்டங்கள் நெல்லிக்காயினாலேயே தயாரிக்கப்படுகிறது. ஆயுளை நீடிக்கக் கூடிய சக்தி நெல்லிக்காய்க்கு உண்டு என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
nellikai benefits in tamil நெல்லிக்காய் வற்றலும் பல்வேறு நன்மையான பலன்களை கொடுக்கக் கூடியது.
வாந்தி, ஒக்காளம் போன்றவைக்கு
நெல்லிக் காயைத் துவையல் செய்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாந்தி, ஒக்காளம், சுவையின்மை போன்ற குறைபாடுகள் குணமாகும்.
காமாலை, குன்மம், இருமல், அஜீரணம் நீங்க
மேலே கண்ட நோய்கள் குணமாக முதலில் நெல்லிக்காய் சாறு எடுத்துப் புளிக்க வைக்கவும். பின்னர் இதில் சுத்தமான தேனை சாறின் எட்டில் ஒருபாகம் சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் திப்பிலித் தூளையும், சர்க்கரையையும் சேர்த்து அடுப்பில் ஏற்றிக் காய்ச்சவும், பாகு பதம் வந்ததும் கீழே இறக்கி ஆறவிட்டுச் சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தவும்.
இதிலிருந்து தினசரி காலை, மாலை இருவேளை, ஒரு ஸ்பூன் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வரவும். இதனால் காமாலை, குன்மம், இருமல், அஜீரணம் போன்ற நோய்கள் குணமாகும்.
எலும்புருக்கி நோய்க்கு
எலும்புருக்கி நோயினால் அவதிப்படுகிறவர்கள் ஒரு தேக்கரண்டி நெல்லிச் சாறுடன் ஒரு தேக்கரண்டி சுத்தமான தேன் சேர்த்து தினசரி காலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலனைப் பெறலாம்.
பல் வியாதிக்கு
பல்லில் உண்டாகும் பயோரியா வியாதிகளுக்கு நெல்லி இலை மருந்தாகப் பயன்படுகிறது.
நெல்லி இலையில் சாறு எடுத்து வாய்க் கொப்பளித்து நெல்லிக் காயை உட்கொண்டால் நலமாகும்.
ஆறாத புண்ணுக்கு
சில சமயம் உடலில் காயம் ஏற்பட்டால் ஆறாமல் அழுகிப் புழுத்து விடும். அதற்கு நெல்லிக்காயை அரைத்து மெழுகு பதத்திற்கு எடுத்து சிறு மாத்திரை உருண்டைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி கண்ணாடி புட்டியில் பத்திரப்படுத்திக்கொள்ளவும்.
இந்த மாத்திரை உருண்டையை தினசரி மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் ஆறாத புண்ணும் ஆறிவிடும்.
சீதக் கழிச்சலுக்கு
நெல்லியின் இலைக் கொழுந்தை ஒரு கைப்பிடி அளவு எடுத்து வந்து மெழுகாக அரைத்து மோரில் கலந்து குடிக்கக் கொடுத்தால் சீதக்கழிசல் குணமாகும்.
குடல் புண்ணுக்கு
நெல்லிக்காயின் சாறு எடுத்து அந்த சாறுடன் கொஞ்சம் பசுவின் கோமயம் கலந்து காலையில் சாப்பிடவும். இதுபோன்று தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குடல்புண் பூரண குணமாகும்.
செம்பட்டை முழகருமையாக
ஒரு சிலரின் முடி கருமையாக இல்லாமல் செம்பட்டை நிறத்துடன் காணப்படும்.
நெல்லிக் கனிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலை அந்த நீரில் எலுமிச்சம் பழத்தின் சாறு பிழிந்து கலக்கி அதனை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக்குளித்து வரவும்.
இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களிலேயே முடி கருப்பாக மாறும்.
வயிற்றுக்கடுப்பு, வாய் நாற்றம், ஆசனக்கடுப்பு நீங்க
மேற்கண்ட குறைபாடுகள் நீங்க தினசரி நெல்லிக் காயின் சாறை மட்டும் சாப்பிட்டு வந்தால் மேற்கண்ட குறைபாடுகள் நீங்கும்.
தவிர சிறுநீர் எரிச்சல் உள்ளவர்களும் தினசரி இந்தச் சாறை உண்டு குணமாகலாம்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் தினசரி மூன்று வேளை நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி மட்டுப்படும் nellikai benefits in tamil நெல்லிக்காய் பயன்கள்.
நெல்லிக்காய் லேகியம்
தேக காந்தல், கிராணி, பொருமல், இருமல், க்ஷயம், ஈளை போன்ற வியாதிகளுக்குக் நெல்லிக்காய் லேகியம் சிறந்த மருந்தாகும்.
நெல்லிக்காய் வற்றல் 1 கிலோ, சர்க்கரை 300 கிராம் இவற்றைத் தயார் செய்து கொள்ளவும்.
பின்னர் சுக்கு, மிளகு, திப்பிலி, ஓமம், கிராம்பு, தக்கோலம், மோடி. ஏலம், குங்கிலியம், குக்கில், வாய்விளங்கம், சீரகம், தனியா, கூகைநீறு. அதிமதுரம் இவைகளை ஒவ்வொன்றும் 20 கிராம் வீதம் சேகரித்துக் கொள்ளவும்.
நெல்லிக்காய் வற்றலை ஒரு மட்பாண்டத்தில் போட்டு 10 லிட்டர் சுத்தமான நீர் விட்டு அடுப்பில் வைத்து சிறுதீயாக எரியவிடவும்.
1 லிட்டர் அளவிற்குச் சுண்டக் காய்ச்சியதும் கீழே இறக்கிப் பிசைந்து வடிகட்டி மறுபாத்திரத்தில் ஊற்றி அதில் சர்க்கரையைக் கொட்டிக் கரைத்து அடுப்பில் வைத்து சிறுதீயாக எரியவிடவும்.
பாகுபதம் வரும்போது 20 கிராம் வீதம் சேகரித்து வைத்துள்ள மற்றச் சரக்குகளை நன்கு இடித்து சூரணம் செய்து கொஞ்சம் கொஞ்சமாக அதில்போட்டுக் கிளறிக்கொண்டே கீழே இறக்கிவிடவும்.
கீழே இறக்கி ஆறியதும் போதிய அளவு நெய், தேன் விட்டு நன்கு கலந்து கையில் ஒட்டாத பதமாகப் பிசைந்து ஒரு ஜாடி அல்லது பெரிய கண்ணாடிப் பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
இந்த லேகியத்திலிருந்து வேளைக்கு கழற்சிக் கொட்டை அளவு எடுத்து காலை, மாலை இரு வேளைகள் வீதம் சாப்பிட்டு வந்தால் மேலே கண்ட வியாதிகள் குணமாகும். இதற்கு இச்சாபத்தியம் இருக்கவும் nellikai benefits in tamil நெல்லிக்காய் பயன்கள்.