மரவள்ளி கிழங்கு சாகுபடி Maravalli Kilangu

0
741

மரவள்ளி கிழங்கு சாகுபடி

சேமியா, ஜவ்வரிசி, நூடுல்ஸ் போன்ற உணவுப் பொருள்களுக்கு தேவையான மூலப் பொருட்கள் மரவள்ளிக் கிழங்கிலிருந்து கிடைக்கின்றன. மேலும், மாத்திரைகளின் மேற்புறமானது மரவள்ளிக் கிழங்கிலிருந்து கிடைக்கும் ஸ்டார்ச்சு பவுடர் கொண்டே தயாரிக்கப்படுகிறது. பத்து மாத பயிரான மரவள்ளி ஒரு பணப்பயிர், மற்ற பயிர்களை விட பராமரிப்பு செலவு மிகவும் குறைவு. எனவே இதை விவசாயிகள் பயிர் செய்தால் நல்ல லாபம் பெறலாம்.

விதை நேர்த்தி :

மரவள்ளி கிழங்கு அறுவடை செய்து ஒரு வாரத்திற்குள் உள்ள குச்சிகளை மட்டும் நடவு செய்ய வேண்டும். நல்ல திடமான மற்றும் காயாத குச்சிகளை தேர்வு செய்ய வேண்டும்.

நிலத்தை தயார் செய்யும் முறை :

நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை உழவேண்டும், கடைசி உழவில் ஒரு ஏக்கருக்கு பத்து டன் தொழுஉரம் அல்லது இரண்டு டன் மண்புழு உரம் இட வேண்டும்.

நடவு செய்யும் முறைகள் :

உழுத நிலத்தில் வட்டப்பாத்தி அமைத்து, அதில் மூன்று அடிக்கு, மூன்று அடி என்ற அளவில் மரவள்ளிக் கரணைக் குச்சிகளை செங்குத்தாக நடவு செய்ய வேண்டும். சொட்டுநீர் பாசனமாக இருந்தால் கடைசி உழவு செய்யும் போது சமமான தப்பை கொண்டு மண்ணை நிரவ வேண்டும், பின்பு மூன்று அடிக்கு, மூன்று அடி என்ற அளவில் குச்சிகளை நடவு செய்ய வேண்டும்.

நிலத்தை ஈரமாக்கி அதன் பின் குச்சிகளை நடவு செய்ய வேண்டும்.

நடவு செய்யும் போதே தனியாக ஒரு பாத்தியில் மரவள்ளி குச்சியை நாற்று விட வேண்டும், ஏனெனில் நடவு செய்த பின் வளராத குச்சிகளை ஒரு மாதத்திற்குள் மாற்ற வேண்டும், அப்போது நாற்று விட்ட குச்சிகளை எடுத்து வளராத குச்சிகளுக்கு பதிலாக நடவு செய்ய வேண்டும்.

நீர் மேலாண்மை :

மற்ற பயிர்களை விட மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு மிகவும் குறைந்த நீரே போதுமானது.

நடவு செய்து பத்து நாட்கள் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும். அதற்கு பின்பு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சினால் போதுமானது.

இதை மானாவரியாகவும் பயிரிடலாம் அல்லது நீர் பாய்ச்சும் முறையிலும் பயிரிடலாம். நீர் பாசனத்துக்கு சொட்டுநீர் முறையை பயன்படுத்துவதாக இருந்தால் இன்னும் குறைந்த நீரே போதுமானது.

மரவள்ளி கிழங்கு சாகுபடி
மரவள்ளி கிழங்கு சாகுபடி

கேள்வி பதில்கள்

எனது நிலம் களிமண் பாங்கான மண்வகையினைச் சார்ந்ததாகும். இதில் நான் மரவள்ளி சாகுபடி செய்து அதிக மகசூல் எடுக்க முடியுமா?

களி மண் வகைகளில் மரவள்ளி சாகுபடி செய்தல் கூடாது. எனெனில் கிழங்கு வளர்ச்சி குன்றி குறைந்த மகŸலே கிடைக்கும். எனவே மணற்பாங்கான இரும் பொறை மண் வகைகளில் சாகுபடி செய்தல் சிறந்ததாகும்.

மரவள்ளி/சேகோ ஆலைகளில் கிடைக்கும் மரவள்ளி கிழங்கு பட்டைகளை கால்நடைத் தீவனமாக பயன்படுத்தலாமா?

அவ்வாறு கிடைக்கும் கிழங்கு பட்டைகளை வெயிலில் நன்கு உலர்த்த வேண்டும். அவ்வாறு உலர்த்தும் போது அதனின் உள்ள நஞ்சு பொருள் (ஹரோசைனிக் அமிலம்) அழிக்கப்பட்டு கால்நடைகளுக்கு எந்தவித தீங்குகளையும் ஏற்படுத்துவதில்லை.

எனது மரவள்ளி வயலில் பெரும்பால செடிகளில் இலைகள் சுருங்கியும், வெளிறிய நிறத்துடனும் காணப்படுகின்றது. இது நன்மையா? தீங்கு ஏற்படுத்துமாயின் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது?

இலைகளின் சுருக்கமானது மரவள்ளியின் ரைவஸ் நோய் தாக்குதலாகும் இந்நோய் வெள்ளை ஈகள் மூலம் பரப்பப்படுகின்றது. எனவே முதற்கட்டமாக வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 2மிலி/ லிட்டர் தெளிக்க வேண்டும். மேலும் நடவின் போது நோய் தாக்கப்படாத செடிகளிலிருந்துகருணை எடுத்து நடவு செய்ய வேண்டும்.

ஒரு எக்டர் நடவு செய்ய எவ்வளவு கருணைகள் தேவைப்படுகின்றன.

17,000

நான் மானாவாரியில் மரவள்ளி சாகுபடி செய்ய விரும்புகின்றேன். ஏதேனும் உக்திகள் உண்டா?

கருணைகளை நடவிற்கு முன் பொட்டாசியம் குளோரைட் @ 5 கிராம்/லிட்டர் மற்றும் நுண்ணூட்டங்களான துத்தநாகம் மற்றும் தாமிர சல்பேட் @ 0.5% கலவையில் 20 நிமிடம் நனைத்து நடவு செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here