கத்தரிக்காய் பயன்கள் – Kathirikai Benefits

0
54
kathirikai benefits in tamil
kathirikai benefits in tamil

கத்தரிக்காய் பயன்கள் – Kathirikai Benefits

kathirikai benefits in tamil கத்தரிக்காய் பயன்கள் கத்தரிக்காயில் பலவகை உண்டு பச்சை, வெள்ளை, ஊதா நிறக்காய்களே நிறையக் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. இவைகளிலும் பெரியது, சிறியது என்று பல வகை உண்டு. கத்தரிக்காய் வருடம் முழுவதற்கும் கிடைக்கக்கூடிய காய் வகையில் ஒன்றாகும். விதை பிடியாத கத்திரிக்காய்கள் தான் சமையலுக்கு ஏற்றதாகும். பூப்பிஞ்சுகளாக உள்ள கத்தரிக்காயை பத்திய உணவாகச் சேர்த்துக் கொள்ளலாம்.

கத்தரிக்காய்களைச் சாம்பார், குழம்பு இவைகளில் போட்டுச் சமைத்துச் சாப்பிடலாம். பருப்புச் சேர்த்துக் கூட்டு வைக்கலாம். பொரியல், பச்சடி வைக்கலாம்.

கத்தரிக்காய் சாம்பார் வைத்து உணவில் சேர்த்துச் சாப்பிடும்போது மிகவும் சுவையாக இருக்கும். பொரியல் செய்தும் சாப்பிடுவார்கள்.

இதில் வைட்டமின் “C” சத்தும், உலோகப் பொருட்களும் தேவையான அளவு உள்ளது. ருசியாக உள்ளது என்று அதிகம் சாப்பிட்டால் உடலில் அரிப்பை உண்டாக்கக் கூடியது.

முற்றிய கத்தரிக்காயைவிட விதைகள் இல்லாத பிஞ்சுக் கத்தரிக்காய் உடல் நலத்திற்கு மிகவும் நல்லதாகும்.

கத்தரிக்காய் பயன்கள் – Kathirikai benefits in tamil

பித்த சம்பந்தமான வியாதிகள் குணமாக

பித்த வாந்தி, பித்த கிறுகிறுப்பு உள்ளவர்கள் தினசரி கத்தரிக்காயைச் சமைத்துச் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், பித்தம் தணிந்து குணமாகும்.

கபத்தை உடைக்க

சலதோஷம் பிடித்து நெஞ்சில் கபம் கட்டியிருந்தால் கபத்தை உடைத்து வெளியேற்ற தினசரி கத்தரிக்காய் சாப்பிட்டு வரவேண்டும்.

கத்தரிக்காய் கபத்திற்குக் கைகண்ட மருந்தாகும். ஆகையினால் கபத்தினால் கஷ்டப்படுபவர்கள் கத்தரிக்காயில் கொஞ்சம் மிளகு சேர்த்து சமைத்துத் நாள்தோறும் இரண்டு வேளை உணவில் சேர்த்து உண்டால் கபம் காணாமல் போய்விடும்.

மலத்தை இளக்க

மலச்சிக்கலினால் கஷ்டப்படுகிறவர்கள் தினசரி கத்தரிப் பிஞ்சுவுடன், பச்சைப் பருப்பு என்னும் பாசிப் பருப்புச் சேர்த்துக் கூட்டு வைத்து சாதத்துடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். வாரத்தில் இரண்டு முறையாவது கத்தரிக்காய் கூட்டுச் சேர்த்துக் கொள்வது நல்லது.

ஆனால், உடலில் சிரங்கு, இரணம் உள்ளவர்கள் கத்தரிக்காயை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது. சிரங்கு, இரணத்தை மேலும் விருத்தியாக்கும்.

READ HERE  murungakkai benefits in tamil - முருங்கைக்காய் பயன்கள்

உடல் புத்துணர்ச்சி

பலநாட்கள் நோயால் வாடியவர்கள் பிஞ்சுக் கத்தரிக்காயுடன் பாசி பருப்பு சேர்த்து மிளகு, உப்பு சேர்த்து சுடுசோறில் பிசைந்து சாப்பிட்டால் உடல் புத்துணர்ச்சி பெறும்.

அம்மை நோய்கள்

ஏப்ரல் மாதம் முதல் கலை வரை கோடைக்காலம், ஆகையால் அம்மை நோய்கள் வர வாய்ப்புண்டு. அம்மாதங்களில் கத்தரிக்காயை உணவில் சேர்த்துக்கொண்டால் அம்மை நோய் வராமல் தடுக்கும்.

தோல் நோய்

உடல் அரிப்பு விலக

தோல் சம்பந்தமான நோய்கள் உள்ளவர்கள் உணவில் கத்தரிக்காயை அதிகம் சேர்த்துக் கொள்ளக் கூடாது. தோல் நோய் மேலும் அதிகமாகும்.

மலச்சிக்கல் குணமாகும்

மலச்சிக்கல் பிரச்சனை

கத்தரிக்காயுடன் பாசிப்பருப்பைச் சேர்த்துக் கூட்டு செய்து உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் குணமாகும் kathirikai benefits in tamil கத்தரிக்காய் பயன்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here