தினம் ஒரு கொய்யாப் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

0
457

கொய்யா பழம் பயன்கள்

கொய்யா பழம் பயன்கள் guava fruit benefits in tamil பப்பாளிப்பழம் மற்றும் கொய்யா போன்ற பல வகைகளிலும் வைட்டமின் சி சத்து நிறைய அளவில் உள்ளது .எனவே இந்த பழங்கள் கிடைக்கும் போது உண்டு வருவதன் மூலம் முதுமையை தள்ளிப்போடலாம்.

வைட்டமின் சி சத்து நிறைந்த காய்கறி வகைகள் அல்லது பல வகை களை உண்ணாமல் இருந்தால் முதுமை அது நம்மைத் துரத்திக் கொண்டே தான் வரும் என்பதில் சந்தேகம் இல்லை.இன்னும் சில ஆண்டுகள் பொருத்து வர வேண்டிய முதுமையானது அதற்கு முன்னரே வர ஆரம்பித்துவிடும். இதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது .

கொய்யாப்பழம் நீண்ட காலமாக இந்தியாவில் பயிரிடப்படுகிறது. பொதுவாக இது காயாகவும் கிடைக்கிறது காயாக இருக்கும் போது பச்சை நிறத்திலும் பிறகு மஞ்சள் நிறமாக பழுத்த நிலையில் மாறுகிறது.

இதில் அதிக அளவு சாறு இருக்கிறது. சதைப்பகுதியில் முழுவதும் சிறு சிறு அளவில் விதைகள் காணப்படும் .

நீண்ட நாள் சேமித்து வைக்க முடியும் மேலும் இதில் மற்ற பழங்களை விட அதிகளவு வைட்டமின் சி உள்ளது இதில் மேலும் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் அதிக பருமனாக இருப்பவர்கள் மற்றும் மலச்சிக்கல் உள்ளவர்களும் பரிந்துரைக்கப்படுகிறது கொய்யா பழம் பயன்கள் guava fruit benefits in tamil.

கொய்யா பழம் பயன்கள் – Guava fruit benefits in tamil

கொய்யா பழம் பயன்கள் - Guava fruit benefits in tamil

 1. ரத்த அழுத்த நோயாளிகளின் ரத்த குழாய்கள் சீர்பெறுவதற்கு வைட்டமின் சி உட்கொள்ள வேண்டும் என்ற மருத்துவர் கூறியதுமே வைட்டமின் பி மாத்திரைகளை தேடவும் வைட்டமின் சி சார்ந்த மருந்துகள் ஏதாவது கிடைக்கும் டானிக் உண்டா என்றுதான் நமது என்னம் சொல்கிறது .நமது வீட்டு தோட்டத்தில் உள்ள பப்பாளிப்பழத்தை பற்றியும் கொய்யாப்பழத்தை பற்றியும் நமது எண்ணம் சொல்வதில்லை.
 2. கொய்யாப் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நிச்சயமாக ஏற்படாது.
 3. துவர்ப்பு கலந்த இனிமையுடன் கூடியதாக இருக்கும் .
 4. சில வகை பழங்களை வெட்டிப் பார்த்தால் உள்ளே ரோஜா நிறமுடன் காணப்படும்.
 5. ஓடித்திரியும் குழந்தைகளின் உடல் கட்டமைப்புக்கு வைட்டமின் சி சத்து அதிக அளவு தேவை.
 6. ஆகவே குழந்தைகளுக்கு கொய்யாப் பழக் காலத்தில் இப்பழத்தை கொஞ்சம் கூடுதலாகவே கொடுக்க வேண்டும் .
 7. கொய்யாப் பழத்தை தோலோடு உண்ணும் போதுதான் அதில் பொதிந்துள்ள சத்துக்களை முழு அளவில் பெற முடிகிறது.
 8. அதுமட்டுமல்ல கொய்யா பழத்தை தோலை நீக்கி சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படும்.
 9. கொய்யா பழத்தில் பல வகையிருந்தாலும் அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
 10. தினமும் இந்த பழத்தை உண்டு வந்தால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை.
 11. ஆரஞ்சுப் பழத்தைவிட மூன்று மடங்கு அதிகமாக வைட்டமின் சி சத்து உள்ளது
 12. மிகவும் சிறு குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. நன்றாக ஓடியாடித் திரியும் குழந்தைகளுக்குத்தான் இதை கொடுக்க வேண்டும்.
 13. இரத்த சோகையை குணப்படுத்தும் ஆற்றலை பெற்றிருக்கிறது . எனவே சாதாரணமான காலத்திலேயே கொய்யாப்பழத்தை சாப்பிட்டு ரத்த சோகை வர விடாமல் செய்ய வேண்டும்.
 14. நோய் வந்த பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கக்கூடாது.
 15. சிலருக்கு இருந்தாற்போலிருந்து இருதயம் படபடக்க ஆரம்பிக்கும். இத்தகையவர்கள் உடனடியாக நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை சாப்பிடுவது நலம் செய்வதாகும்.
 16. சிலர் வயிற்றுப் புண்ணால் அதிக அளவில் கஷ்டப்படுகிறார்கள். இந்த வயிற்றுப்புண்ணை போக்குவதற்கு கொய்யா பழம் நல்ல மருந்தாகிறது.
 17. காசநோய் உள்ளவர்கள் கூட இந்த பழத்தை சாப்பிடலாம்.
 18.  நீரிழிவு நோயாளிகள் கூட கொய்யாப் பழத்தை சாப்பிட்டு நிம்மதியுடன் வாழலாம்.
 19. கொய்யாக் காய், பழம், இரண்டையும் சமைத்து சாப்பிடுகிறார்கள்.
 20. பலவிதமான திண்பண்டங்கள் ,பானங்கள், தயாரிக்கிறார்கள்.
 21. கொய்யா பழம் போன்றவற்றை பச்சையாக சாப்பிடுவது நல்லது.
 22. அதிக மிருதுவாக்கி விட்டாலும் உயிர்சத்து சி குறையும்.
 23. கொய்யா ஈறுகளின் இரத்தக்கசிவை தடுப்பதற்கு கெட்டிப்படுத்தும் கொய்யாவில் உள்ள நார்ச்சத்து வயிற்றை சுத்தபடுத்தி வலுவடையச் செய்யும்.
 24. மலச்சிக்கலை அகற்றும்.
 25. ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
 26. வளரும் குழந்தைகளின் எலும்புகள் வலுப் பெற்று வளர கொய்யா பழம் அடிக்கடி சாப்பிடவேண்டும்.
 27. கொய்யா பழத்தில் கிருமிகளே கொல்லும் சக்தி இருக்கிறது.
 28. சொறி சிரங்கு குணமாக ரத்த சோகை நீங்கும்.
 29. கொய்யா இலை ஆரோக்கியம் அளிக்கும் சிறந்த பானமாகும்.
 30. கொய்யாப்பழச் சதையைப் பிசைந்து தாய்ப்பால் மறந்த குழந்தைகளுக்கு ஊட்டலாம்.கொய்யா பழம் பயன்கள் guava fruit benefits in tamil
READ HERE  தினமும் பப்பாளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் உடல்நல நன்மைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here