தினசரி அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா

0
458

அத்திப்பழம் பயன்கள்

அத்தி மரம் வரலாறு 

Athipalam health benefits in tamil அத்தி மரம் அளவான உயரம் உடைய நடுத்தர மரமாகும். இம்மரம் சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும்.

பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தை போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும். அத்திப் பழம் நல்ல மணத்துடன் இருந்தாலும், அறுத்துப் பார்த்தால் உள்ளே மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது.

அத்தி பழத்தின் நன்மைகள் – Athipalam health benefits in tamil

 • தினமும் மூன்று பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தியை அதிகரிக்கும்.
 • அத்தி பழத்தின் இலைகளை எடுத்து பொடியாக்கி தினமும் வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் குணமாகும்.
 • தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர்ப்பை புண் மற்றும் சிறுநீரில் கல் போன்ற சிறுநீரக சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது.
 • அத்திப்பழம் சோர்வு, இளைப்பு, வலிப்பு நோய், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
 • மலச்சிக்கலை குணப்படுத்த இந்த பழம் அதிகம் உதவுகிறது.
 • ஒல்லியாக இருப்பவர்கள் தினமும் 3 பழங்களை எடுத்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குண்டாவீர்கள்.
 • உடலில் உள்ள அனைத்து கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது.
 • கல்லிரல் வீக்கத்தை குணப்படுத்துகிறது.
 • வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தினமும் காலையில் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் வாய் துர்நாற்றம் அகலும்.
 • சருமத்தை பாதுகாத்து மற்றும் சரும சுருக்கங்களை சரிசெய்து இளமையாக இருக்க இந்த பழம் உதவுகிறது.
 • முடி உதிர்தல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் அத்திப்பழத்தை எடுத்து வந்தால் முடி உதிர்வு குறைந்து நன்கு முடி வளரும்.
 • மூச்சுத்திணறல் உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் எடுத்து வந்தால் மூச்சு குழாயில் உள்ள அசுத்தங்களை சுத்தம் செய்கிறது.
 • அத்தி பழத்தில் மெக்னீசியம், ஜிங்க், மாங்கனீசு போன்ற தாதுக்கள் உள்ளன.
 • இவை நீண்ட ஆயுளையும் கருவுறுதலுக்கான வளத்தையும் கொடுக்கின்றன.
 • ஆகவே குழந்தை பேறுக்கு திட்டமிடும்போது அல்லது கர்ப்பமாக இருக்கும் போது அத்திப்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடும் போது அது ஒரு சிறந்த பலனைத் தருகிறது.

அத்தி பழத்தின் தீமைகள்

 • அத்தி பழத்தில் அதிக அளவுகளில் அத்தி லேடெக்ஸ், மரத்திலிருந்து வரும் சாறு, சிலருக்கு செரிமான மண்டலத்தில் இரத்தப்போக்கு ஏற்படலாம்.
 • அத்தி இலையை சருமத்தில் தடவுவதால் பிரச்சனைகள் வர கூடும்.
 • இது சூரிய ஒளியில் அதிக உணர்திறன் கொண்ட சருமத்தை ஏற்படுத்தும்.
 • அத்தி பழம் அல்லது இலைகளுடன் தோல் தொடர்பு உள்ளது எனவே  உணர்திறன் உள்ளவர்களுக்கு சொறி ஏற்படலாம்.

அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள்

பழத்தில் உள்ள தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் அத்திப்பழத்தின் பல ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.

 • அத்திப்பழத்தில்
 • வைட்டமின் ஏ,
 • வைட்டமின் பி 1,
 • வைட்டமின் பி 2,
 • கால்சியம்,
 • இரும்பு,
 • பாஸ்பரஸ்,
 • மாங்கனீசு,
 • சோடியம்,

பொட்டாசியம் போன்ற பல பயனுள்ள சத்துக்கள் உள்ளன.

அத்தி பழத்தை தேனில் கலந்து சாப்பிடலாமா?

அத்தி பழத்தை தேனில் கலந்து சாப்பிடலாம் இப்படி சாப்பிட்டு வந்தால் பித்தம் நீங்கும் மற்றும் பித்தத்தால் வரும் நோய்களையும் குணமாக்குகிறது. மேலும் அத்திப்பழத்தில் தென் கலந்து சாப்பிடுவதால் மூல நோய்கள் குணமாகும்.

ஏன் அத்திப்பழத்தை உலர வைத்து சாப்பிட வேண்டும் ?

அத்திப்பழம்  நல்ல மணத்துடன் இருக்கும். இந்த பழங்களை வெட்டி பார்த்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள் மற்றும் புழுக்கள் தென்படும். அதனால் தான் பெரும்பாலும் அத்தி பழங்களை அப்படியே சாப்பிட படுவதில்லை. ஆகவே தான் இந்த பழங்களை உலர வைக்கப்பட்ட பின்னர் சாப்பிடப்படுகிறது.

உலர் அத்திப்பழம் சாப்பிடும் முறை

பொதுவாக காய்ந்த அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடலாம். இதில் அதிக கரையும் மற்றும் கரையா நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. நீரில் ஊற வைக்கும் போது கரையும் நார்ச்சத்து உடைந்து எளிதில் உடலுக்குள் செரிக்கப்படுவதால் ஊற வைத்த அத்திப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு நல்லது. இரவில் ஊற வைத்து அதிகாலையில் சாப்பிட்டால் நல்ல பலனை தரும்.

ஆண்மை அதிகரிக்க அத்திப்பழம் எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?

உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான மூன்று விஷயம் என்னவென்றால், அத்திப்பழம் பேரிச்சம்பழம் தேன் இவை மூன்றையும் சொல்லலாம். இதனை நாள்தோறும் குறைவான அளவில் சாப்பிட்டு வந்தாலே போதுமானது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலும் வலிமை பெறும். உடலில் இரத்தம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை பெருகும்.

ஒரு பாத்திரத்தில் பேரீச்சம்பழம் அரைக்கிலோ எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சரிசமமாக தேனை எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் குங்குமப்பூவை சிறிதளவு தூவி விடுங்கள். இதை காலை நேரத்தில் வெயிலில் அரைமணி நேரம் வைத்து பின்னர் அதனை ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் தினமும் இரவு உறங்க செல்லும் முன் இரண்டு பேரீச்சம் பழத்தை எடுத்து சாப்பிட்டு அதன் பின்னர் ஒரு டம்ளர் பால் குடித்து விட்டு உறங்க வேண்டும். இவ்வாறு செய்தால் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

அத்திப்பழம் பயன்கள் – Athipalam health benefits in tamil

அத்திப்பழம் பயன்கள் -  Athipalam benefits in tamil

 1. அத்திப்பாலை மூட்டு வலியுடையவர்கள் வலி உள்ள இடங்களில் பற்றுப் போட்டுவர விரைவில் வலி குறைந்து நலம் பெறலாம்.
 2. தீப்புண்களுக்கு அத்தி மரத்தின் பாலை மருந்தாக உபயோகப்படுத்தி வந்தால் தோலில் தீப்புண்னால் ஏற்படும் வடுக்கள் தோன்றாது.
 3. உடலில் ஆங்காங்கு தோன்றும் கருமை நிறமான மருக்கள் மீது அந்த மரத்தின் பாலை தடவி வர இரண்டு மாதங்களில் மரு உதிர்ந்து விடும்.
 4. வயிற்றுப்புண், வாய்ப்புண், பேதி, இரத்த வாந்தி ,மற்றும் பெண்களுக்கான கர்ப்பபை ரணம் ஆகியவை நீங்கும்.
 5. அத்திப்பால் 15 மில்லியுடன் வெண்ணெய் சர்க்கரை கலந்து காலை மாலை அருந்தி வர பெரும்பாடு சிறுநீரில் ரத்தம் போதுவது , நரம்பு பிடிப்பு மற்றும் ரத்தம் கலந்த வயிற்று போக்கு ஆகியவை நீங்கும்.
 6. இரத்த மூலம் சீதபேதி இரத்தக் கழிச்சல் இவைகளை போக்கிட நல்ல மருந்தாக திகழ்கிறது.
 7. அத்திக்காயை கொஞ்சம் வாங்கி அதை இரண்டாக உடைத்து உள்ளே உள்ள பூச்சியை எடுப்பதற்கு நல்ல சூடான வெந்நீரில் போட்டால் போதும் அந்தப் பூச்சிகள் இறந்து போகும் பின்னர் இதை புட்டு செய்வது போன்ற ஏதேனும் ஒரு பக்குவத்தில் செய்து சாப்பிடலாம்.
 8. இவ்விதமாக அத்திக்காயை துவரை வைத்து வாரத்திற்கு இரண்டு தினங்கள் சாப்பிட்டு வர ரத்த மூலம் ரத்த கசிதல் போன்றவை குணம் பெறும்.
 9. அத்திப்பழம் ரத்த விருத்தியை உண்டு பண்ணும்.
 10. அத்துடன் அதே நேரத்தில் மலச்சிக்கலையும் போக்கும் தன்மை கொண்டதாகும்.
 11. தென்னிந்தியாவில் மக்கள் இதன் பிஞ்சையும் , காயையும் சமைத்து உண்பர்.
 12. மத்தியகால உணவாகும் அத்திப்பழம் பயன்கள் athipalam health benefits in tamil.
 13. பிஞ்சு ,காய் ,பழம் ,பால் ,பட்டை ,மது என எல்லாம் பயன்படும்.
 14. காயை சமைத்து உண்டால் வாத நோய் ,சூலை, உடல் வெப்பம் ,புண் ,ஆகியவை தீருமாம்.
 15. அத்திப் பழம் ரத்தத்தை பெருக்கும்.
 16. அத்திப்பால் நீரிழிவு, சூலை, இரத்த கலந்த மூத்திரப் போக்கை, இவைகளை குணமாக்கும்.
 17. பால் ரத்தபேதி ,பெரும்பாடு, வெள்ளைப்படல்,தாதுக் குறைவு , இவற்றிருக்கும் நன் மருந்தாகும்.
 18. வெண்ணெய் அல்லது சீனியுடன் கலந்து கொடுக்கலாம்.
 19. நீரிழிவால் வந்த பிளவை, கீல்வாதம் , மூட்டு வீக்கம், இவைகட்கு இப்பாலைப் பற்றிய குணம் தெரியும்.
 20. அத்திப் பிஞ்சை கறி செய்து சாப்பிடலாம்.
 21. அத்தி பிஞ்சின் துவர்ப்பு வயிற்று நோய்கள் பலவற்றையும் போக்கும்.
 22. ரத்த விருத்தியும் தரும்.
 23. அத்திப்பழம் உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
 24. சதைப்பற்று உள்ளது அதைப்பற்றி இல்லாதது என அதில் இரண்டு வகை உண்டு.
 25. இது தவிர கல்லத்தி,பேயத்தி , என்பனவாக வேறு பிரிவுகள் உண்டு.
 26. இவை வேலிக்கு மட்டுமே பயன்படும்.
 27. சதைப்பற்றுள்ள அத்தி தான் உடல் நலத்துக்கு உதவுவது.
 28. கறி சமைக்க பயன்படுவது.
 29. அத்திபழத்தில் இரும்புச்சத்து உள்ளன.
 30. பல உலோக சத்துகளும் வைட்டமின் சத்துக்களும் போன்ற பல சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு இது நல்லதொரு மருந்தாகவும் படுத்தப்படுகிறது.
 31. அத்திப்பழத்தை தொடர்ந்து நாள்தோறும் 1அல்லது2 உன்பதனால் பல நன்மைகள் உண்டாகும் .
 32. உடல் வளமும் பெருகும்.
 33. வெப்பம் குறையும்.
 34. வெட்டைச்சூடு பித்தத்தின் ஆதிக்கம் தனியே வைக்கவும்.
 35. கபத்தை போக்கும் குணம் அத்திக்கு உண்டு.
 36. மார்ச்புச் சலி இளக்கி வெளிப்படுத்தி கபத்தைக் குறைக்கும்.
 37. விடாத ,இருமலும் , இலுப்பும் இதனை தினமும் முறையாக உன்பதனால் சாந்தி அடைந்து சுகமாகும்.
 38. வாய்ப்புண்கள், உதட்டு வெடிப்பு , இரத்த மூலம் போன்றவை குணமாகும் அத்திப்பழம் பயன்கள் athipalam health benefits in tamil.
 39. அத்தி பிஞ்சுகளை கைப்பிடி அளவு சேகரித்து புழுக்கள், சொத்தைகள் ,ஆகியவற்றை நீக்கி நீரில் சுத்தம் செய்து அதை ஒன்றிரண்டாக இடித்து , அவித்து எடுத்து அத்துடன் பூண்டு , இஞ்சி , பாசிப்பயிறு , சோம்பு ,சீரகம் , ஆகியவற்றுடன் நெய் விட்டு தாளித்து மதிய உணவில் 2 பிடி சாதத்துடன் 5 நாட்கள் உண்டு வரலாம்.

அத்திப்பழம் சாப்பிடுவது எப்படி

அத்திப்பழத்தை உலர்த்தி பொடியாக்கி அதனை ஒரு தேக்கரண்டி அளவு தினமும் இரு வேளை பாலில் போட்டு குடித்துவர இதயம் பலம் ஆவதுடன் உடலில் இரத்தத்தின் அளவு கூடும் .

READ HERE  பலா பழத்தின் மருத்துவப் பயன்கள் - Palapalam Benefits

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here