அசோலா வளர்ப்பு முறை அசோலா தொட்டிகள் விற்பனை
எங்களிடம் குறைந்த விலையில் தரமான அசோலா தொட்டிகள் கிடைக்கும்.
Contact : 8825980556
அசோலா தொட்டி அளவு மற்றும் விலை
12 அடி நீளம் 4 அடி அகலம் = RS, 1900 ( Including Courier Charge)
12 அடி நீளம் 6 அடி அகலம் = RS, 2200 ( Including Courier Charge)
12 அடி நீளம் 10 அடி அகலம் = RS, 2800 ( Including Courier Charge)
அசோலா தொட்டி வாங்கினாள் #அசோலா தாய்வித்து மற்றும் #தண்ணீர் வெளியேற்றும் Pipe, Superphosphate இலவசமாக கொடுக்கப்படும்.
அசோலா வளர்ப்பு முறை
அசோலாவை தயாரிக்க தேவைப்படும் இடம்:
நிழல் உள்ள இடமாக தேர்வு செய்யவேண்டும் வெயில் பட்டால் அசோலா கருகி விடும்
தென்னந்தோப்பாக இருந்தாலும் பரவாயில் பாதி நிழல், பாதி வெயில் பட்டாலும் பரவாயில்லை வெயில் அதிகம் இருக்கக் கூடாது காற்றும் அதிகம் இருக்கக்கூடாது 30 டிகிரி வெப்பநிலை தேவை அவ்வாறான இடத்தை தேர்வு செய்யவேண்டும்
அசோலாவை தயாரிக்க தேவையான பொருள்
- சில்பாலின் சீட் -1
- மண் – 50 கிலோ
- தண்ணீர் 50 லிட்டர்
- பசுஞ்சாணம் 5 கிலோ
- ஒரு கை பிடியளவு போர் மண்
- அல்லது ராக்பாஸ்பேட் சிறிதளவு
- அசோலா வித்து அரைக்கிலோ
அசோலாவை தயாரிக்கும் முறை:
- முதலில் சில்பாலின் சீட்டில் 30 கிலோ மண் வரை நிரப்ப வேண்டும்.
- செம்மண் இருந்தால் போடலாம் நமது வசதிற்கேற்ப செம்மண்ணை விட கரிசல்மண் சிறந்தது கரிசல்மண்ணை விட வண்டல்மண் சிறந்தது ( குளத்து மண்ணில் அசோலா நன்றாக வளர்கிறது.)
- தண்ணீர் சில்பாலின் சீட்டில் ( 10 செ.மீ) ஒரு இஞ்சு தண்ணீர் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்
- தண்ணீர் 50 லிட்டர் ஊற்ற வேண்டும்
- 3கிலோ சாணத்தை நன்றாக கரைத்து அவற்றில் ஒரு கைபிடியளவு போர்வெல் மண்ணையும் கலக்க வேண்டும்
- அல்லது ராக்பாஸ்பேட்டையும் போட்டு நன்றாக கலக்கி சில்பாலின் சீட்டில் ஊற்ற வேண்டும்
- அதன்பிறகு அசோலா விதையை அனைத்து இடங்களும் பரவுமாறு தூவி விட வேண்டும்.
- காலை மாலை இரண்டு நேரங்களிலும் நன்றாக கலக்க வேண்டும்.
- 3 நாட்களிலேயே அதன் வளர்ச்சி இரட்டிப்பாகும் 15 நாட்களில் தயாராகிவிடும்.

அசோலாவை பயன்படுத்தும் முறை:
அசோலாவை எடுத்து நன்றாக அலசிவிட்டு ஒரு கால்நடைக்கு அசோலா முக்காக்கிலோ வீதம் தவிடு மற்றும் கால்நடை தீவனத்தில் கலந்து கொடுக்கலாம்
அல்லது அசோலாவை எடுத்து அலசிவிட்டு காயவைத்து பொடியாக அரைத்து வைத்துக் கொண்டும் தேவையான நேரத்தில் அசோலாபொடியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
அசோலா வளர்ப்பின் நன்மைகள்:
மாடு , ஆடு மற்றும் கோழி போன்றவற்றுக்கான நல்ல புரதம் மிக்க தீவனம் அசோலா.
* பால் உற்பத்தி அதிகரிக்க
* ஆடுகளின் எடை கூட
* கோழி முட்டை இடும் திறன் அதிகரிக்க அசோலா பயன்படுத்தலாம்.
- அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிட அதிகமாக உள்ளது.
- அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது.
- நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது.
தேவை என்றால் தங்களுடைய முகவரியை Whatsapp Number 8825980556 அனுப்பி வைக்கவும். கொரியர் சர்வீஸ் மூலமாக தமிழ்நாடு, கேரளா மற்றும் பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
எதுக்கு கோழிக்கு அசோலா குடுக்கணும்??
என்ன சத்து இருக்கு ??
- இதில் 25 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளன.
- கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் 7 முதல் 10 விழுக்காடு வரையும் , தாது உப்புகள் 10 முதல் 15 விழுக்காடு வரையும் , வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் ஆகிய சத்துகள் இதில் உள்ளன.
- பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏ உருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்து அதிகரிக்கும்.
இதற்காகவே அசோலா கொடுக்கவேண்டும்.
