வால் சேவல் வளர்ப்பு Vaal Seval Valarpu

0
1316
வால் சேவல் வளர்ப்பு Vaal Seval Valarpu
வால் சேவல் வளர்ப்பு Vaal Seval Valarpu

வால் சேவல் வளர்ப்பு Vaal Seval Valarpu

வால் சேவல் வளர்ப்பு :

சேவல்கள் இறைச்சிக்காகவும் அழகுக்காகவும் சண்டை போன்ற கிராம வாழ்வியல் விளையாட்டுகளுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இந்த வகை சேவல்கள் மற்றும் கோழிகளை இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்.

வால் சேவல் :

சேவல் வளர்ப்பு என்பது மிகச்சிறந்த வருவாய் தரும் தொழிலாக மாறி இருக்கிறது. குறிப்பாக வால் சேவல்கள் சந்தையில் நல்ல விலை போகின்றன.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் பறவை இனம் இந்த வால் சேவல் ஆகும்.

இந்த சேவல்கள் பல்வேறு பருவநிலைகளையும் நோய்களையும் தாங்கி வாழும் திறன் படைத்தவை.

நாட்டுரக சேவல்களான இவற்றை நோய்கள் எளிதில் தாக்காது என்பதால் இதை வளர்க்க சிரமம் கிடையாது.

இவை பார்க்க அழகான தோற்றம் கொண்டவையாக இருப்பதால் இவற்றை தற்போது வீடுகளில் அழகுக்காகவும் வளர்க்கிறார்கள். இந்த வகை சேவல்களுக்கு எப்போதும் நல்ல விலை இருந்து வருகிறது.

இதன் வால் நீளம் மற்றும் நிறத்தை வைத்து இவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. வால்சேவல்களின் உடல் ஆரோக்கியத்தை பொருத்து இவற்றின் வால்களின் நீளமும் பளபளப்பும் அமையும்.

உணவு :

இவற்றுக்கு சத்துள்ள தீவனத்தை கொடுத்து வளர்க்க வேண்டும். இந்த ரகம் சேவல் குஞ்சுகளை பெருவதற்கு இதே இனத்தை சேர்ந்த கோழிகளை வளர்த்து அதன் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டும்.

வால் சேவல் இனத்து கோழிகள் 1 கிலோ ரூ. 300 முதல் 350 வரை கிடைக்கின்றன. இவற்றை ரகம் பார்த்து வாங்கி சேவலுடன் இனப்பெருக்கம் செய்ய வேண்டும்.

நேரம் மற்றும் தீவனம் :

சேவல் மற்றும் கோழி பராமரிக்க நாளொன்றுக்கு சுமார் 3 மணி நேரம் செலவிட வேண்டும். தீவனங்களை ஒரு கோழிக்கு 250 கிராம் அளவு ஒரு நாளைக்கு கொடுக்கலாம். இவற்றுடன் உணவுக்கழிவு தவிடு குருணை போன்றவற்றையும் சேர்த்துக் கொடுக்கலாம்.

காலை 1 மணி நேரம் சேவலுக்கு உணவளிப்பதோடு மாலை 2 மணிநேரம் கோழிகள் இடத்தை சுத்தம் செய்து அடைக்கும் பணியில் ஈடுபட வேண்டும்.

READ HERE  அசோலா வளர்ப்பு முறை அசோலா தொட்டிகள் விற்பனை #Asola Bed Sales In Tamilnadu

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here