காளான் வளர்ப்பு முறை (Kalan Valarpu) Grow Mushroom Easily in Home
காளான் வளர்ப்பு :
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதில் சிறந்து விளங்கும் ஒரு தொழில் எதுவென்றால் அது காளான் வளர்ப்பு தான், நீங்கள் நினைக்கலாம் இவற்றில் அவ்வளவு லாபம் கிடைத்துவிடுமா என்று ஆனால் உண்மையில் சுயதொழில் செய்து சாதிக்க வேண்டும் என்பவர்களுக்கு இத்தொழிலானது ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
காளான் வளர்க்கத் தேவையானவை :
- 16 அல்லது 18 சதுர மீட்டர் இடம்
- பாலித்தின் பை
- வைக்கோல்
- தண்ணீர்
காளான் வளர்ப்பு செய்முறை :
- முதலில் 16 அல்லது 18 சதுர மீட்டர் இடம் (குடிசை அல்லது ரூம்) தயார் செய்ய வேண்டும்.
- வைக்கோலில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு கொதிநீரில் முக்கி வைக்கோலை சுத்தம் செய்ய வேண்டும் அல்லது இரசாயனம் பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்ளலாம்.
- 12-24 என்ற அளவுள்ள பாலித்தின் பையில் வைக்கோலை முதலில் 05 செ.மீ. அளவு நிரப்ப வேண்டும். பின்பு காளான் விதையை 20 கிராம் எடுத்து நிரப்பப்பட்ட வைக்கோல் ஓரத்தில் தூவ வேண்டும். (குறிப்பு : காளான் விதைகளை உற்பத்தியாளர்களிடம் அல்லது அங்காடி கடைகளில் கிடைக்கும்.)
- இதுப்போல் மாறி மாறி 07 முதல் 08 அடுக்கு போட வேண்டும். பின்பு பக்கவாட்டில் 03 துளைகள் வீதம் நான்கு பக்கத்திலும் 12 துளைகள் போட வேண்டும்.
- பின்பு குடிலின் மையத்தில் தயார் செய்து வைத்த பாலித்தின் பைகளை கட்டித் தொங்க விட்டு தினமும் தண்ணீரை பாலித்தின் கவரை சுற்றி தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்து வந்தால் 10வது நாளில் காளான் விதைகள் வெள்ளை நிறமாக துளிர் விடுவதைக் காணலாம்.
- பின்பு 27-ஆம் நாளில் காளான் மொட்டுக்கள் இதிலிருந்து தோன்றும். இதை 03 நாட்களில் அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும். ஒரு மாதத்துக்கு 2 ஆயிரம் கிலோ வரை காளான் உற்பத்தி செய்தால் 3 லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைக்கும்.